May 5, 2024

தமிழ் வில்லன் வேண்டாம் , அவர் தான் வேண்டும் ..!! விஜய்க்காக ஒற்றைக்காலில் நிற்கும் வெங்கட் பிரபு ..!! இவரு பயங்கரமான வில்லனாச்சே ..!!

தற்போது லியோ வெற்றியை தொடர்ந்து இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகி வரும் தளபதி 68 என்ற படத்தில் பிஸியாக நடித்துக்கொண்டு வருகிறார் நடிகர் விஜய் . இந்த படத்தில் விஜய்யுடன் இணைந்து மைக் மோகன் ,பிரபுதேவா, பிரசாந்த், சினேகா ,லைலா, மீனாட்சி போன்ற பல பிரபலங்கள் நடித்து வருகின்றனர் . இந்த படத்தில் விஜய் இரட்டை வேடத்தில் நடித்து வருகிறாராம்.

இப்படி இருக்கும் நிலையில் இந்த படத்தில் வில்லனாக பயங்கரமான நடிகர் ஒருவர் கமிட் ஆகியுள்ளாராம் . அவர் வேறு யாருமில்லை நான் ஈ பட வில்லனான கிச்சா சுதீப் தான் . நான் ஈ படத்தில் தன்னுடைய வில்லத்தனமான நடிப்பால்  தமிழ் ரசிகர்களை மிரட்டி இருந்த சுதீப்பிடம்,

விஜய் படத்தில் வில்லனாக நடிக்க சொல்லி பேச்சு வார்த்தை நடத்தி வருகிறாராம் இயக்குனர் வெங்கட் பிரபு . அது மட்டுமல்லாமல் ஏற்கனவே விஜய்யும் சுதீப்பும் இணைந்து  புலி படத்தில் நடித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *