April 30, 2024

புது மாப்பிள்ளைக்கு நல்ல யோகமடா ..!! 46 வது பிறந்தநாளை ..!! மறக்க முடியாத பிறந்தநாளாக மாற்றிய மனைவி ..!!

ரெடின் கிங்ஸ்லி ஓர் தவிர்க்க முடியாத தமிழ் திரைப்பட காமெடி நடிகர் ஆவார் . ஆரம்பத்தில் குரூப் டான்ஸ்ராக இருந்து வந்த ரெடின் கிங்ஸ்லி கடந்த 2018 ஆம் ஆண்டு இயக்குனர்  நெல்சன் இயக்கத்தில் நயன்தாரா நடிப்பில் வெளியான கோலமாவு கோகிலா என்ற படத்தின் மூலம் காமெடி நடிகராக அறிமுகமானார் . பின்னர் இந்த படத்தை தொடர்ந்து எல்கேஜி, கூர்கா, ஏ1 ,நெற்றிக்கண் போன்ற ,

பல திரைப்படங்களில் நடித்திருந்தாலும் இடையில் வந்த டாக்டர் திரைப்படம் இவருக்கு மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தியது என்று தான் சொல்ல வேண்டும் . இதன் பிறகு தான் தவிர்க்க முடியாத காமெடி நடிகர் என்ற அந்தஸ்தை பெற்றார் ரெடின் கிங்ஸ்லி .

இதன் பிறகு வருடத்திற்கு பத்து பாடங்களுக்கு மேலாவது நடித்துக் கொண்டு வருகிறார் ரெடின் கிங்ஸ்லி . இந்நிலையில் 46 வயதான ரெடின் கிங்ஸ்லி  கடந்த பத்தாம் தேதி பிரபல சீரியல் நடிகையான சங்கீதா என்பவரை திருமணம் செய்து கொண்டார் . இப்படி இருக்கும் நிலையில்,

திருமணமாகி முதல் பிறந்த நாளை நேற்று கொண்டாடியிருந்தார் ரெடின் கிங்ஸ்லி. அப்படி தன்னுடைய கணவரின் பிறந்தநாளுக்காக சர்ப்ரைஸ் கொடுத்திருந்தார் நடிகை சங்கீதா . தற்போது அந்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளது ….

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *