May 2, 2024

உலகநாயகனுக்கு 69 வது பிறந்த நாளாம் ..!! படையெடுத்து வந்த தமிழ் பிரபலங்கள் ..!! வைரலாகும் பிறந்தநாள் புகைப்படங்கள் ..!!

கமல்ஹாசன் ஓர் பிரபலமான தமிழ் திரைப்பட நடிகர், இயக்குனர், தயாரிப்பாளர் ,நடன கலைஞர் ,பாடகர் , பாடலாசிரியர் என்று பன்முகம் கொண்டவராவார்.  தன்னுடைய ஆறாவது வயதிலேயே திரை பயணத்தை தொடங்கிய கமல்ஹாசன் இன்று இந்திய அளவில் ஒரு முக்கியமான நடிகராக இருந்து வருகிறார் . இன்னும் சொல்லப்போனால் இவருடைய நடிப்பை பார்த்து வியந்து போகாதவர்களே கிடையாது ,

என்று தான் சொல்ல வேண்டும் . அந்த அளவிற்கு ஒரு கதாபாத்திரம் கொடுத்தால் அந்த கதாபாத்திரமாகவே வாழ்ந்து நடிக்க கூடியவர் கமல்ஹாசன்.  குறிப்பாக இவர் தமிழ்மொழி மட்டுமல்லாமல் தெலுங்கு ,மலையாளம், கன்னடம் ,ஹிந்தி ,பெங்காலி என்று ,

இதுவரை 230 படங்களுக்கு மேல் நடித்திருக்கிறார் . அதோடு அப்போது கமலின் நடிப்பில் வெளியான தோல்வி படங்களை எல்லாம் இப்போது ரசிகர்கள் தலையில் தூக்கி வைத்து கொண்டாடி வருகின்றனர் .  தற்போது கைவசம் 3 படங்களுக்கு மேல் வைத்திருக்கிறார் கமல்ஹாசன் .

இப்படி இருக்கும் நிலையில் இன்று தன்னுடைய 69 ஆவது பிறந்த நாளை கோலாகலமாக கொண்டாடியிருக்கிறார் கமல்ஹாசன் . அப்படி அந்த பிறந்தநாள் கொண்டாட்டத்தில் தமிழ் பிரபலங்களான குஷ்பூ, பார்த்திபன், சூர்யா ,நரேன், ஏ வி எம் சரவணன் ,பாலிவுட் நடிகரான ,

அமீர்கான் போன்ற  பல பிரபலங்கள் கலந்து கொண்டனர்.  தற்போது அந்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.இதோ அந்த புகைப்படங்களை நீங்களும் பாருங்க …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *