April 29, 2024

சூப்பர் ஸ்டார் ” அதற்கு ” சரிப்பட்டு வரமாட்டார் ..!! வெளிப்படையாக சொல்லிய ராகவா லாரன்ஸ் ..!! இவர் சொன்னா கரெக்ட்டா தான் இருக்கும் ..!!

தமிழ் திரையுலகில் நடிகர் ,இயக்குனர் , நடன கலைஞர் என்று கலக்கி கொண்டு வருபவர் நடிகர் ராகவா லாரன்ஸ்.  மேலும் இவர் இந்த அளவிற்கு உயர்ந்ததற்கு முக்கிய காரணம் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் என்று தான் சொல்ல வேண்டும்.  அந்த வகையில் ஆரம்பத்திலேயே ராகவா லாரன்ஸின்  திறமையை பார்த்து வியந்து போன ரஜினி தான் இவரை பிரபுதேவாவிடம் சேர்த்து விட்டாராம்.

இதன் பிறகு தான் இவ்வளவு உயரத்தில் இருந்து வருகிறார் நடிகர் ராகவா லாரன்ஸ் . அது மட்டுமல்லாமல் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் தீவிர ரசிகர் ராகவா லாரன்ஸ் . இப்படி இருக்கும் நிலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அதற்கு சரிப்பட்டு வர மாட்டார் என்று கூறியிருக்கிறார் ,

நடிகர்  ராகவா லாரன்ஸ் .  அந்த வகையில் கடந்த 2015 ம் ஆண்டு ராகவா லாரன்ஸ் நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட்டான திரைப்படம் தான் காஞ்சனா 2 . இந்த படத்தில் முதலில் நடிக்க இருந்தது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தானாம் . கிட்டத்தட்ட அதற்கான பேச்சுவார்த்தை முற்றிலும்,

முடிந்து விட்டதாம் . பின்னர் திடீரென ராகவா லாரன்ஸ் வேண்டாம் என்று முடிவெடுத்து விட்டாராம்.  காரணம் அந்த படத்தில் ஹீரோ தன்னுடைய தாயின் இடுப்பில் மீது உட்காருவது போன்ற காட்சிகள் இருக்கும்.  அது சூப்பர் ஸ்டாருக்கு சரி வராது . அதனால் தான் அந்தப் படத்தில் ,

தானே நடித்ததாக கூறியிருந்தார் நடிகர் ராகவா லாரன்ஸ்.  இதை பார்த்த ரசிகர்கள் நல்ல வேளை சூப்பர் ஸ்டார் அந்த படத்தில் நடிக்கவில்லை என்று கூறி வருகின்றனர்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *