April 26, 2024

60 வது பிறந்தநாளை கொண்டாடிய நெப்போலியன் ..!! அமெரிக்காவுக்கே சென்று வாழ்த்து சொல்லிய தமிழ் நடிகைகள் ..!! செம குஷியில் நெப்போலியன் ..!!

90 களில் தமிழ் சினிமாவை கலக்கி வந்த பிரபல நடிகர்களில் ஒருவர் தான் நடிகர் நெப்போலியன் . கடந்த 1991 ஆம் ஆண்டு இயக்குனர் பாரதிராஜா இயக்கத்தில் வெளியான புது நெல்லு புது நாத்து என்ற படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார் நடிகர் நெப்போலியன் . பின்னர் இந்த படத்தை தொடர்ந்து இது நம்ம பூமி ,எஜமான் ,கிழக்கு சீமையிலே, சீவலப்பேரி பாண்டி ,எட்டுப்பட்டி ராசா , சுயம்வரம் ,

தென்காசி பட்டினம் , விருமாண்டி போன்ற பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்து தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்துக் கொண்டார் நடிகர் நெப்போலியன்.  மேலும் இவர் தமிழ் மொழி மட்டுமல்லாமல் தெலுங்கு ,மலையாளம் ,கன்னடம் மற்றும் ஆங்கில மொழி படங்களிலும்,

நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது . இதனிடையே ஜெயசுதா என்பவரை திருமணம் செய்து கொண்ட நடிகர் நெப்போலியனுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர்.  மேலும் நெப்போலியன் நல்ல நடிகர் என்பதை தாண்டி நல்ல தொழிலதிபராகவும் இருந்து வருகிறார் .

இதனால் தற்போது குடும்பத்துடன் அமெரிக்காவிலேயே செட்டிலாகி விட்டார் நடிகர் நெப்போலியன் . இப்படி இருக்கும் நிலையில் சமீபத்தில் தன்னுடைய அறுபதாவது பிறந்தநாளை கொண்டாடி இருக்கிறார் நடிகர் நெப்போலியன் . இந்நிலையில் அமெரிக்காவுக்கே சென்று,

நெப்போலியனுக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறியிருக்கிறார்கள் தமிழ் நடிகைகள் குஷ்பூ மற்றும் மீனா . அந்த புகைப்படத்தை தற்போது தன்னுடைய சமூக வலைத்தளப்பக்கத்தில் பதிவிட்டுள்ளார் நடிகர் நெப்போலியன்…

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *