May 2, 2024

எல்லாருக்கும் ஒரே சட்டம் தான் ..!! லைசென்ஸ் இல்லாமல் பைக் ஓட்டிய தனுஷின் மகன் ..!! அபராதம் போட்ட போக்குவரத்து அதிகாரிகள் ..!! எவ்ளோ தெரியுமா ..??

தனுஷ் ஒரு பிரபலமான தமிழ் திரைப்பட முன்னணி நடிகர் ஆவார்.  இயக்குனர் கஸ்தூரிராஜாவின் இளைய மகனான தனுஷ் துள்ளுவதோ இளமை என்ற படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார் . இதைத்தொடர்ந்து பல கேலி கிண்டல்களை தாண்டி இன்று இந்திய அளவில் ஒரு பிரபலமான நடிகராக இருந்து வருகிறார் நடிகர் தனுஷ்.  மேலும் நடிகர் தனுஷ் தமிழ் மொழி மட்டுமல்லாமல் தெலுங்கு ,ஹிந்தி மற்றும்,

ஆங்கில மொழி படங்களிலும் கலக்கி கொண்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது . இதனிடையே சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மூத்த மகளான ஐஸ்வர்யாவை திருமணம் செய்து கொண்டார் தனுஷ் . திருமணமான இவர்களுக்கு யாத்ரா , லிங்கா என்ற இரண்டு மகன்கள் உள்ளனர்.

மேலும் திருமணமாகி 18 வருடங்கள் ஆன நிலையில் தனுஷும், ஐஸ்வர்யாவும் விவாகரத்து பெற்று பிரிந்து விட்டனர் . இப்படி இருக்கும் நிலையில் இன்னும் 18 வயது கூட பூர்த்தி ஆகாத தனுஷின் மகன் பொது இடத்தில் ஆர்15 பைக் ஓட்டி சர்ச்சையில் சிக்கியிருக்கிறார் . அந்த வகையில்,

பொது இடத்தில் பைக் ஓட்டி பழகி இருக்கிறார் தனுஷின் மகன் . அந்த வீடியோ சமீபத்தில் வைரலானது . மேலும் இதை பார்த்த பலரும் ஊருக்கு ஒரு நியாயம் , அவர்களுக்கு ஒரு நியாயமா என்றெல்லாம் கேள்வி எழுப்பினார்கள் . இந்நிலையில் இதற்கு அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது,

போக்குவரத்து துறை . அந்த வகையில் ஹெல்மெட் அணியாமலும்,  லைசன்ஸ் இல்லாமலும் வாகனம் ஓட்டியதற்காக தனுஷின் மகனுக்கு ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்துள்ளார்களாம்.  இனிமேல் இப்படி பைக் ஓட்டக்கூடாது என்றும் கூறியுள்ளார்களாம்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *