May 1, 2024

முன்னணி இயக்குனர் ..!! பேவரைட் நடிகை ..!! பேவரைட் இசையமைப்பாளர் ..!! அடுத்த சம்பவத்துக்கு தயாரான சிவகார்த்திகேயன் ..!!

தற்போது தமிழ் சினிமா உலகில் நடிகர் சிவகார்த்திகேயனின் மார்க்கெட் உச்சத்தில் இருக்கிறது என்று தான் சொல்ல வேண்டும் . எந்த ஒரு சினிமா பின்புலமும் இல்லாமல் சாதாரண தொகுப்பாளராக தன்னுடைய வாழ்க்கையை தொடங்கிய சிவகார்த்திகேயன் இன்று தமிழ் சினிமா ரசிகர்களின் ஃபேவரைட் நடிகராக இருந்து வருகிறார் . மேலும் ஆரம்பத்தில் காமெடிக்கு முக்கியத்துவம் உள்ள படங்களை ,

தேர்வு செய்து நடித்து வந்த சிவகார்த்திகேயன் தற்போது கதைக்கு முக்கியத்துவம் உள்ள கதைக்களங்களை தேர்வு செய்து ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறார்.  அப்படி அண்மையில் இவருடைய நடிப்பில் வெளியான மாவீரன், அயலான் போன்ற படங்கள்,

நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.  அதோடு தற்போது விஜய் விரைவில் அரசியலுக்கு வர உள்ளதால் அவரின் இடத்தை சிவகார்த்திகேயன் பிடிப்பார் என்றும் சினிமா வட்டாரங்களில் பேசப்படுகிறது.  இப்படி இருக்கும் நிலையில் அடுத்த படத்தில் கமிட் ஆகியிருக்கிறார்,

சிவகார்த்திகேயன் . அந்த வகையில் இயக்குனர் ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் உருவாக உள்ள புதிய படத்தில் ஹீரோவாக கமிட் ஆகியுள்ளார் சிவகார்த்திகேயன் . மேலும் இந்த படத்தில் இவருக்கு ஜோடியாக ரசிகர்களின் ஃபேவரைட் நடிகையான ருக்மினி வசந்த் நடிக்க உள்ளாராம்.

இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்க உள்ளாராம்.  இப்படி இருக்கும் என்று இந்த படத்தின் பூஜை புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *