May 1, 2024

அஜித்தின் வழியை மட்டும் விஜய் பின்பற்றினால் ..!! கண்டிப்பாக விஜய் தான் அடுத்த முதலமைச்சர்..!! அடிச்சு சொல்லும் அஜித் ரசிகர்கள் ..!!

தமிழ் சினிமா உலகில் சூப்பர் ஸ்டார் ,உலக நாயகனுக்கு பிறகு பெரும் தலைகளாக இருந்து வருவது விஜய் மற்றும் அஜித் தான்.  என்னதான் சினிமாவில் போட்டி போட்டுக் கொண்டாலும் நிஜ வாழ்க்கையில் இருவரும் நல்ல நண்பர்களாகவே இருந்து வருகின்றனர். இந்நிலையில்  தற்போது விஜய் விரைவில் அரசியலுக்கு வருவது அனைவருக்கும் தெரிந்த ஒன்று தான் . ஆனால் நடிகர் விஜய் மட்டும் அஜித்தின் வழியை ,

பின்பற்றினால் கண்டிப்பாக முதலமைச்சர் ஆகிவிடலாம் என்று கூறப்படுகிறது . அந்த வகையில் அஜித்தை பொருத்தவரை தன்னால் யாருக்கும் எந்த பிரச்சனையும் வரக்கூடாது என்பதில் கண்ணும் கருத்துமாக இருப்பார்.  அப்படி ஆரம்பத்தில் ரசிகர்கள் இவருக்காக நேரத்தை செலவிட்டதை,

பார்த்து ரசிகர் மன்றமே வேண்டாம் என்று முடிவு செய்து இருந்தார் . அது மட்டுமல்லாமல் சினிமாவிற்கு எந்த அளவிற்கு முக்கியத்துவம் கொடுக்கிறாரோ , அதே அளவிற்கு குடும்பத்திற்கும் முக்கியத்துவம் கொடுப்பார் அஜித்.  இதனாலேயே இதுவரை இவருடைய குடும்பம் ,

எந்த ஒரு சர்ச்சையிலும் சிக்கவில்லை . அதோடு  சமூக வலைத்தள பக்கமே இதுவரை அஜித் தலைவைத்து  படுத்தது கிடையாது . ஆனால் விஜய்யை  எடுத்துக்கொண்டால் அவருடைய பெற்றோர்களை சரியாக கவனிக்காமல் இருந்தது,  விவாகரத்து சர்ச்சை என்று பலவற்றில்,

சிக்கினார் . அது மட்டுமல்லாமல் தான் களத்தில் இறங்காமல் ரசிகர்களை தூண்டி விடுவது போன்ற விஷயங்களையும் செய்து வருகிறார் விஜய் . இதையெல்லாம் தவிர்த்து அஜித் போல விஜய் செய்தால் கண்டிப்பாக இவர் முதலமைச்சராக ஆகலாம் என்று கூறப்படுகிறது…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *