April 28, 2024

38 வது பிறந்தநாளில் தன்னுடைய குடும்ப புகைப்படங்களை வெளியிட்ட அசின் ..!! எத்தனை வருஷமாச்சு இவரை பார்த்து ..!!

ஒரு காலகட்டத்தில் தமிழ் சினிமா ரசிகர்களின் பேவரைட் நடிகையாக இருந்து வந்தவர் நடிகை அசின் . மலையாள படத்தின் மூலம் தன்னுடைய திரை பயணத்தை தொடங்கிய அசின் கடந்த 2004 ஆம் ஆண்டு ஜெயம் ரவி நடிப்பில் வெளியான எம் குமரன் சன் ஆப் மகாலட்சுமி என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு கதாநாயகியாக அறிமுகமானார்.  பின்னர் இந்த படத்தைத் தொடர்ந்து உள்ளம் கேட்குமே , கஜினி ,மஜா, சிவகாசி,

வரலாறு ,தசாவதாரம் , வேல் போன்ற பல திரைப்படங்களில் நடித்து தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்துக் கொண்டார் . மேலும் இவருடைய எதார்த்தமான நடிப்பு தமிழ் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது என்று தான் சொல்ல வேண்டும்.  குறிப்பாக நடிகை அசின் தமிழ் மொழி மட்டுமில்லாமல் ,

தெலுங்கு , மலையாளம் மற்றும் ஹிந்தி மொழி படங்களிலும் நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது . இப்படி நடித்துக் கொண்டிருக்கும் போதே  கடந்த 2016 ஆம் ஆண்டு ராகுல் சர்மா என்பவரை திருமணம் செய்து கொண்டார் . திருமணமான இவர்களுக்கு ஆறு வயதில் ஒரு மகளும் இருக்கிறார் .

திருமணமான பிறகு நடிப்பதை நிறுத்திக் கொண்டார் நடிகை அசின். இப்படி இருக்கும் நிலையில் இன்று தன்னுடைய 38 வது பிறந்த நாளை கொண்டாடும்  நடிகை அசினின் குடும்ப புகைப்படங்கள் இணையத்தை கலக்கி கொண்டு வருகிறது . இதோ அந்த புகைப்படங்களை நீங்களும் பாருங்க …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *