April 30, 2024

கொழு கொழுவென இருக்கும் இந்த குழந்தை யார் தெரியுமா ..?? இவர் சிரிப்பாலையே ரசிகர்களை கவர்ந்த நடிகையாச்சே ..?? யாருன்னு நீங்களே பாருங்க ..!!

பிந்து மாதவி ஒரு பிரபலமான தமிழ் திரைப்பட நடிகை மற்றும் மாடல் ஆவார் . ஆரம்பத்தில் சிறு சிறு கதாபாத்திரங்களில் நடித்து வந்த நடிகை பிந்து மாதவி கடந்த 2011 ஆம் ஆண்டு வெளியான வெப்பம் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு நடிகையாக அறிமுகமானார் . இருந்தாலும் இவர் ரசிகர்களிடையே பெரிய அளவில் பிரபலமானது கடந்த 2012 ம் ஆண்டு கிருஷ்ணா நடிப்பில் வெளியான,

கழுகு படத்தின் மூலம் தான்.இந்த படத்திற்கு பிறகு தான் இவர் பெரிய அளவில் பிரபலமானார் . பின்னர் இந்த படத்தை தொடர்ந்து சட்டம் ஒரு இருட்டறை, கேடி பில்லா கில்லாடி ரங்கா ,தேசிங்கு ராஜா, வருத்தப்படாத வாலிபர் சங்கம், தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும்,

சவாலே சமாளி, பசங்க 2 ,ஜாக்சன் துரை , பக்கா , கழுகு 2  போன்ற பல திரைப்படங்களில் நடித்திருந்தார் நடிகை பிந்து மாதவி . மேலும் இவர் தமிழ் மற்றும் தெலுங்கு மொழி படங்களில் அதிகம் நடித்துவந்தார் .  ஆனால் சமீப காலமாக இவருக்கு பெரிய அளவில் பட  வாய்ப்புகள்,

எதுவும் அமையவில்லை என்று தான் சொல்ல வேண்டும் . இருந்தாலும் பட வாய்ப்புக்காக காத்துக் கொண்டிருக்கிறார் நடிகை பிந்து மாதவி.  இப்படி இருக்கும் நிலையில் நடிகை பிந்து மாதவியின் சிறு வயது புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது .

இதை பார்த்த ரசிகர்கள் நடிகை பிந்து மாதவியா  இது.?  சிறுவயதில் கொழு கொழுவென இருக்கிறாரே என்று கூறி வருகின்றனர். இதோ அந்த புகைப்படத்தை நீங்களும் பாருங்க …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *