April 28, 2024

என் வாழ்வின் லட்சியமே சிம்புவுடன் நடிப்பது தான் ..!! அடம்பிடிக்கும் கவர்ச்சி நடிகை ..!! என்ன ஆடு தானா வந்து மாட்டுது ..!!

சிம்பு ஓர் தவிர்க்க முடியாத தமிழ் திரைப்பட நடிகர் ஆவார் . இயக்குனரும் , நடிகருமான டி ராஜேந்திரனின் மூத்த மகனான சிம்பு ஆரம்பத்தில் டி ராஜேந்தர் இயக்கத்தில் வெளியான படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்து வந்தார் . பின்னர் ஒரு கட்டத்தில் அப்பாவின் இயக்கத்திலேயே ஹீரோவாகவும் அறிமுகமானார் சிம்பு . பின்னர் தொடர்ச்சியாக பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்து தமிழ் சினிமா ரசிகர்களின்,

பேவரைட் நடிகராக மாறினார் சிம்பு . குறிப்பாக சிம்பு என்றால் வம்பு என்று சொல்வது போல இவருடன் எந்த நடிகை நடித்தாலும் கிசுகிசுவில் சிக்கி விடுவார்கள் . இப்படி எல்லாம் இருந்து வந்த சிம்பு தற்போது திருந்தி படங்களில் நடித்துக் கொண்டு வருகிறார்.  அந்த வகையில் தற்போது,

இயக்குனர்  தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் உருவாகி வரும் புதிய படத்தில் நடித்துக் கொண்டு வருகிறார் .இந்நிலையில் என்னுடைய வாழ்க்கையின் லட்சியமே சிம்புவுடன் நடிப்பது தான் என்று வெளிப்படையாக கூறியுள்ளார் கவர்ச்சி நடிகை ஒருவர் . அவர் வேறு யாருமில்லை,

நடிகை தேவயானி சர்மா தான்.  தெலுங்கில் வெளியான ஒரு சில படங்களில் நடித்திருக்கும் தேவயானி சர்மா சமீபத்தில் பேட்டி ஒன்றில் கூறியதாவது ,நான் தெலுங்கு, ஹிந்தி மொழி படங்களில் நடித்திருந்தாலும் எனக்கு தமிழில் நடிக்க வேண்டும் என்ற ஆசை ரொம்ப நாளாகவே இருக்கிறது .

குறிப்பாக என்னுடைய வாழ்வின் லட்சியமே சிம்புவுக்கு ஜோடியாக நடிப்பதுதான் . இதற்காக நான் முழு வீச்சின் களமிறங்கியுள்ளேன் . கண்டிப்பாக அவருடன் நடித்தே தீருவேன் என்று கூறியிருக்கிறார்.  இதைப் பார்த்த ரசிகர்கள் சிந்துவுக்கு இப்படி ஒரு ரசிகையா என்று கேள்வி எழுப்பி வருகின்றனர்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *