May 2, 2024

யோவ் சிவனாண்டி நீ பெத்த மகளாயா இது..?? வருத்தப்படாத வாலிபர் சங்கம் வெளியாகி 10 வருசமாச்சு ..!! இன்னும் அதே அழகில் இருக்கும் ஸ்ரீ திவ்யா ..!!

தமிழ் சினிமா உலகில் கடந்த 2013 ஆம் ஆண்டு இயக்குனர் பொன்ராம்  இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான திரைப்படம் தான் வருத்தப்படாத வாலிபர் சங்கம் . இந்த படத்தில் சிவகார்த்திகேயனுடன் இணைந்து சூரி, சத்யராஜ் , மொட்டை ராஜேந்திரன் போன்ற பல பிரபலங்கள் நடித்திருந்தனர் .  இந்த படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு கதாநாயகியாக அறிமுகமானவர் தான்,

நடிகை ஸ்ரீதிவ்யா . இப்படி வெளியான முதல் படத்திலேயே ஒட்டுமொத்த தமிழ் ரசிகர்களையும் கவர்ந்து விட்டார் நடிகை ஸ்ரீதிவ்யா. பின்னர் இந்த படத்தை தொடர்ந்து ஜீவா ,வெள்ளைக்கார துரை, காக்கி சட்டை ,ஈட்டி ,பெங்களூர் நாட்கள், மருது, காஷ்மோரா , மாவீரன் கிட்டு ,

போன்ற பல திரைப்படங்களில் நடித்திருந்தார் நடிகை ஸ்ரீ திவ்யா . மேலும் இவர் தமிழ் மொழி மட்டுமல்லாமல் தெலுங்கு மற்றும் மலையாள மொழி படங்களிலும் நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது . ஆனால் கடந்த ஆறு வருடமாக தமிழ் சினிமா பக்கமே தலை காட்டாமல்,

இருந்து வருகிறார் நடிகை ஸ்ரீதிவ்யா. இதையடுத்து தற்போது நடிகை ஸ்ரீ திவ்யா  இரண்டு தமிழ் படங்களில் நடித்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது .  இப்படி இருக்கும் நிலையில் வருத்தப்படாத வாலிபர் சங்கம் திரைப்படம் வெளியாகி 10 வருடங்கள் ஆன நிலையில்,

தன்னுடைய லேட்டஸ்ட்  புகைப்படத்தை பகிர்ந்து 10 இயர்ஸ் ஆப் வி வி எஸ் என்று பதிவிட்டுள்ளார் நடிகை ஸ்ரீதிவ்யா.  இதைப் பார்த்த ரசிகர்கள் யோவ் சிவனாண்டி நீ பெத்த மகளாயா இது என்று கூறி வருகின்றனர் …

 

 

View this post on Instagram

 

A post shared by Sri Divya (@sd_sridivya)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *