May 6, 2024

கட்சியின் பெயரை அறிவித்த விஜய் ..!! ரொம்ப சிம்பிளாக இருக்கே ..?? என்ன பெயர் தெரியுமா ..?? வெளிவந்த லேட்டஸ்ட் தகவல் ..!!

தற்போது தமிழ் சினிமா உலகில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு  பிறகு நடிகர் விஜய்க்கு தான் அதிக செல்வாக்கு இருந்து வருகிறது . அப்படி இதுவரை பல சூப்பர் ஹிட் படங்களை கொடுத்திருந்த விஜய் தற்போது இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கிய லியோ படத்தில் நடித்து முடித்து இருக்கிறார்.  இதை அடுத்து  இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கவுள்ள தளபதி 68 படத்தில் நடிக்க இருக்கிறார் நடிகர் விஜய் .

மேலும் பல வருடங்களாகவே நடிகர் விஜய்யை அரசியலுக்கு வர சொல்லி அவருடைய ரசிகர்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர். இந்நிலையில் தற்போது ரசிகர்களின் கோரிக்கையை நிறைவேற்றும் வகையில் விரைவில் கட்சி தொடங்க இருக்கிறார் நடிகர் விஜய் .

அந்த வகையில்  அரசியலுக்கு வருவதற்காக இப்போதே  தன்னுடைய  ரசிகர்களை  வைத்து பல வேலைகளை செய்து வருகிறார் நடிகர் விஜய்.  இதனால் கண்டிப்பாக வருகின்ற தேர்தலில் விஜய் போட்டியிடுவார் என்று உறுதியாக கூறப்படுகிறது.  இப்படி இருக்கும் நிலையில்,

நடிகர் விஜய்யின் கட்சியின் பெயர் தற்போது இணையத்தில் வெளியாகி உள்ளது . அந்த வகையில் நடிகர் விஜய் தொடங்கப் போகும் கட்சிக்கு ” மக்கள் கட்சி ” என்று பெயர் வைத்துள்ளார்களாம்.  இதைப் பார்த்த பலரும் ரொம்ப சிம்பிளாக இருக்கிறதே என்று கூறி வருகின்றனர் .

ஆனால் விஜய்,  கட்சி பெயர் சிம்பிளாக இருந்தாலும் , செயலில் தான் நம்முடைய பவரை காட்ட வேண்டும் என்று கூறியதாக கூறப்படுகிறது. இந்த தகவல் தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *