May 11, 2024

அப்போ வனிதா இப்போ இவரா ..?? வாண்டடாக பிக்பாஸுக்கு வரும் விஜயகுமாரின் வாரிசு ..!! வேண்டவே வேண்டாம் என்று கதறும் ரசிகர்கள் ..!!

தற்போது பிக் பாஸ் சீசன் 7 விரைவில் தொடங்க இருக்கிறது . இதனால் இந்த நிகழ்ச்சியில் யார் யார் போட்டியாளராக கலந்து கொள்ளப் போகிறார்கள் என்று ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்பில் இருந்து வருகின்றன ர் . மேலும் இதற்கு முன்பு பிக் பாஸில் கலந்து கொண்டு பெரிய அளவில் சர்ச்சையை கிளப்பியவர் தான் நடிகை வனிதா விஜயகுமார் . இந்த நிகழ்ச்சி தான் இவரை பெரியளவில் பிரபலமாக்கியது .

இப்படி இருக்கும் நிலையில் விஜய குமாரின் இன்னொரு மகளும் பிக் பாஸில் என்ட்ரி கொடுக்க உள்ளாராம்.  அவர் வேறு யாருமில்லை நடிகை ஸ்ரீதேவி விஜயகுமார் தான் . ஆரம்பத்தில் குழந்தை நட்சத்திரமாக கலக்கி கொண்டு வந்த நடிகை  ஸ்ரீதேவி கடந்த 2002 ஆம் ஆண்டு வெளியான,

காதல் வைரஸ் என்ற படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார்.  பின்னர் இந்த படத்தை தொடர்ந்து பிரியமான தோழி ,தித்திக்குதே, தேவதையை கண்டேன் போன்ற பல திரைப்படங்களில் நடித்திருந்தார் நடிகை ஸ்ரீதேவி . மேலும் இவர் தமிழ் மொழி மட்டுமில்லாமல் ,

தெலுங்கு மற்றும் கன்னட மொழி படங்களிலும் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.  பின்னர் ராகுல் என்பவரை திருமணம் செய்து கொண்ட ஸ்ரீதேவிக்கு ஒரு மகள் இருக்கிறார் . குறிப்பாக திருமணமான பிறகு நடிப்பதை நிறுத்திக் கொண்ட நடிகை  ஸ்ரீதேவி தற்போது பிக் பாஸ் ,

செவனில் போட்டியாளராக  கலந்து கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது . ஆனால் ரசிகர்கள் வேண்டவே வேண்டாம் என்று கதறி வருகின்றனர் . காரணம் பிக் பாஸ்க்கு வந்த கண்டிப்பாக பெயர் கெட்டுப் போவது தான் மிச்சம் என்பதால்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *