April 26, 2024

திற மை இரு ந்தும் பிழை க்க தெரிய லை யே..!! மூ ன்று சூப்ப ர் ஹிட் படங்க ளை தவ றவிட்ட ஜெ ய் ..!! நடி ச்சிருந் தா இ ன்று இவ ருடைய லெவ லே வே று ..!!

ஜெய் ஓர் பிரபலமான தமிழ் திரைப்பட நடிகர் ஆவார் . கடந்த 2002 ஆம் ஆண்டு விஜய் நடிப்பில் வெளியான பகவதி என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு நடிகராக அறிமுகமானார் நடிகர் ஜெய் .  பின்னர் இந்த படத்தை தொடர்ந்து சென்னை 600028 ,சுப்ரமணியபுரம் ,சரோஜா ,கோவா, எங்கேயும் எப்போதும் , ராஜா ராணி போன்ற பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்து தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்துக்கொண்டார் .

மேலும் இந்த திரைப்படங்கள் எல்லாம் இவருக்கு மிகப்பெரிய வரவேற்பை  பெற்று தந்தது என்று தான் சொல்ல வேண்டும் . ஆனால் இப்படி வளர்ந்து வரும் நேரத்தில் சில தவறான பழக்கங்களால் தன்னுடைய சினிமா வாழ்க்கையையே தொலைத்து விட்டார் நடிகர் ஜெய் . அந்த வகையில் நன்றாக வளர்ந்து வரும் நேரத்தில்,

அஞ்சலி மற்றும் வாணி போஜன் போன்ற நடிகைகளுடன் காதல் வலையில் விழுந்தார் நடிகர் ஜெய் . பின்னர் ஒரு கட்டத்தில் அவர்கள் இருவரும் ஜெயுடன் இருந்தால் நம்ப வாழ்க்கை வீணாய் போய்விடும் என்று விலகி சென்றனர்.  இதன் பிறகு பழையபடி மீண்டும் ஒரு சில படங்களில் நடித்துக் கொண்டு வருகிறார் நடிகர் ஜெய் .

இப்படி இருக்கும் நிலையில் சமீபத்தில் பேட்டி ஒன்றில் பேசிய ஜெய் தான் தவறவிட்ட படங்களை குறித்து பேசி இருந்தார் . அந்த வகையில் ஜீவா நடிப்பில் வெளியான சிவா மனசுல சக்தி ,சிம்பு நடிப்பில் வெளியான விண்ணைத்தாண்டி வருவாயா ,விஷ்ணு விஷால் நடிப்பில் வெளியான ராட்சசன் போன்ற,

மூன்று சூப்பர் ஹிட் படங்களை தவறவிட்டிருக்கிறார் நடிகர் ஜெய் . குறிப்பாக அந்த நேரத்தில் புத்தி பிடிமானமாக இல்லாததால் தான் இன்று இந்த நிலைமைக்கு ஆளாகி விட்டேன் என்று கூறியிருந்தார்  நடிகர் ஜெய் . இதைப் பார்த்த ரசிகர்கள் திறமை இருந்தும் பிழைக்க தெரியலையே என்று கூறிவருகின்றனர் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *