April 22, 2024

பட மாக உரு வா கும் இசை ஞானி யின் வா ழ்க்கை ..!! இளை யராஜா வாக நடிப்ப து இந் த பி ரப ல நடி க ரா ..?? பத் து பொ ருத்த மும் பக் கா வாக இரு க்கு ..!!

தமிழ் சினிமாவை பொறுத்தவரை எத்தனையோ இசையமைப்பாளர்கள் வந்தாலும் இளையராஜாவை அடித்துக்கொள்ள ஆளே கிடையாது என்று தான் சொல்ல வேண்டும் . அந்த அளவிற்கு ஒரு தனித்துவமான இசையமைப்பாளர் இசைஞானி இளையராஜா அவர்கள் . அப்படி அன்னக்கிளி என்ற படத்தின் மூலம் தன்னுடைய இசை பயணத்தை தொடங்கிய இளையராஜா ,

இதுவரை ஆயிரத்துக்கும் மேற்பட்ட படங்களில் இசையமைப்பாளராக பணி புரிந்திருக்கிறார்.  அதுவும் இவர் அப்போது இசையமைத்த பாடல்கள் இப்போதும் ரசிகர்களை கவர்ந்து வருகிறது.  அந்த அளவிற்கு இரண்டு தலைமுறை ரசிகர்களையும் தன்னுடைய பாடல்களால் கவர்ந்து வைத்திருக்கிறார் இளையராஜா .

இப்படி இசையில் பல சாதனைகளைப் படைத்த இளையராஜாவின் வாழ்க்கை வரலாறு படமாக உருவாக உள்ளதாம் . அந்த படத்தை பிரபல ஹிந்தி இயக்குனரான பால்கி இயக்க உள்ளாராம்.  இந்நிலையில் இந்த படத்தில் இளையராஜா கதாபாத்திரத்தில் நடிகர் தனுஷை  நடிக்க வைக்க ,

போவதாக முடிவெடுத்துள்ளாராம் இயக்குனர் பால்கி . காரணம் நடிகர் தனுஷ் இளையரா ஜாவின் மிகப்பெரிய ரசிகர் . அதுமட்டுமல்லாமல் இளையராஜாவின் முகம் போல தான் தனுஷின் முகமும் உள்ளது.  இதனால் இளையராஜாவின் கதாபாத்திரத்திற்கு தனுஷ் ,

100% சரியாக வருவார் என்றும்,  இந்தத் திரைப்படம் தனுஷுக்கும் , எனக்கும் ஒரு கனவு திரைப்படமாக இருக்கும் என்று கூறியிருந்தார் இயக்குனர் பால்கி . இவர் ஏற்கனவே தனுஷை வைத்து ஷமிதாப் என்ற படத்தை இயக்கியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *