April 27, 2024

முதல் படத்திலேயே விஜயுடன் நடித்த பிக்பாஸ் ஜனனி ..!! அடுத்த படத்தில் யாருடன் நடிக்கிறார் தெரியுமா ..?? இனி இவருக்கு தொட்டதெல்லாம் வெற்றி தான் ..!!

தமிழ் சினிமாவில் கடந்த 19ஆம் தேதி இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவான திரைப்படம் தான் லியோ.  இந்த படத்தில் விஜய்யுடன் இணைந்து திரிஷா, சஞ்சய்தத் ,அர்ஜுன், கௌதம் வாசுதேவ் மேனன் ,மிஷ்கின் , மன்சூர் அலிகான் ,பிரியா ஆனந்த், மடோனா செபாஸ்டின் , சாண்டி மாஸ்டர் , பாபு ஆண்டனி போன்ற பல நடிகர் , நடிகைகள் நடித்திருந்தனர் . இப்படி வெளியான ,

திரைப்படம் சூப்பர் ஹிட் படமாக அமைந்தது . அது மட்டுமில்லாமல் இந்த திரைப்படம் இதுவரை 560 கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்துள்ளது . மேலும் இந்த படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு நடிகையாக அறிமுகமானவர்தான் பிக் பாஸ் புகழ் ஜனனி .

இலங்கை பெண்ணான ஜனனி பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் தமிழ் ரசிகர்களை வெகுவாக கவர்ந்திருந்தார் . அதோடு முதல் படத்திலேயே  விஜய்யுடன் நடித்திருந்தார் பிக்பாஸ் ஜனனி  . குறிப்பாக இந்த படத்தில் இவர் குறிப்பிட்ட காட்சிகளில் மட்டுமே வந்திருந்தாலும் ,

நல்ல வரவேற்பை பெற்று இருந்தார்.  இன்னும் சொல்லப்போனால் முதல் படமே விஜய்யுடன் நடித்ததால் அடுத்தடுத்து இவருக்கு பட வாய்ப்புகள் குவிந்து வருகிறதாம் . அந்த வகையில் அடுத்த படத்தின் பூஜையில் கலந்து கொண்ட ஜனனியின் புகைப்படம் தற்போது இணையத்தில்,

வெளியாகியுள்ளது . ஆனால் அந்த படத்தில் யார் ஹீரோவாக நடிக்கிறார்கள் என்ற விபரம் இன்னும் வெளியாகவில்லை என்றும்,  விரைவில் அது குறித்த அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *