மணிமேகலை ஓர் பிரபலமான தமிழ் தொலைக்காட்சி தொகுப்பாளினி ஆவார். ஆரம்பத்தில் சன் மியூசிக் தொலைக்காட்சியில் விஜேவாக பணியாற்றி பணியாற்றி வந்தார் மணிமேகலை . அப்படி சன் மியூசிக் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பான கால் மேல காசு , வணக்கம் சன் மியூசிக் , இசையோடு விளையாடு , டைம் பாஸ் போன்ற பல நிகழ்ச்சிகளில் தொகுப்பாளினியாக இருந்து ரசிகர்களிடையே ,
பெரிய அளவில் பிரபலமானார் மணிமேகலை. இதன் பிறகு பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வந்த மணிமேகலை விஜய் டிவியில் ஒளிப்பரப்பான குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் போட்டியளராக கலந்துக்கொண்டு ரசிகர்களின் மனதை கவர்ந்தார் .
குறிப்பாக இந்த நிகழ்ச்சிக்கு பிறகு தான் இவருக்கு ஒரு ரசிகர் பட்டாளமே உருவானது . பின்னர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பான பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியிருந்தார் மணிமேகலை . இதனிடையே கடந்த 2017 ஆம் ஆண்டு நடந்த கலைஞர் ஹுசைன் என்பவரை திருமணம் ,
செய்து கொண்டார் . மேலும் சமூக வலைத்தளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருந்து வரும் மணிமேகலை ஒரு நிகழ்ச்சிக்காக கணவருடன் துபாய் சென்று இருக்கிறார் . அப்போது எடுத்த புகைப்படங்களை தன்னுடைய சமூக வலைத்தளப்பக்கத்தில் பகிர்ந்துள்ளார் மணிமேகலை…