சீமான் ஒரு பிரபலமான தமிழ் திரைப்பட இயக்குனர் நடிகர் மற்றும் அரசியல்வாதி ஆவார். கடந்த 1996 ஆம் ஆண்டு வெளியான பாஞ்சாலங்குறிச்சி என்ற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார் சீமான் . பின்னர் இந்த படத்தை தொடர்ந்து இனியவளே ,வீர நடை, தம்பி போன்ற படங்களை இயக்கியிருந்தார் சீமான் . அது மட்டுமல்லாமல் தமிழில் வெளியான அமைதிப்படை ,
ஆடும் கூத்து ,பள்ளிக்கூடம், மாயாண்டி குடும்பத்தினர் ,மகிழ்ச்சி ,நாகராஜ சோழன் எம் ஏ ,எம் எல் ஏ , மிக மிக அவசரம் ,தவம் , முந்திரிக்காடு போன்ற பல திரைப்படங்களில் நடிகராகவும் நடித்திருந்தார் சீமான் . பின்னர் ஒரு கட்டத்தில் அரசியலில் களம் இறங்கியதால் ,
சினிமாவை விட்டு விலகி விட்டார் சீமான். இப்படி இருக்கும் நிலையில் நயன்தாராவுக்கு அப்பாவாக நடிக்கப் போகிறாராம் சீமான் . அந்த வகையில் இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் விரைவில் உருவாக உள்ள திரைப்படம் தான் எல்ஐசி .
இந்த படத்தில் பிரதீப் ரங்கநாதன் உடன் இணைந்து எஸ் ஜே சூர்யா, கீர்த்தி செட்டி நடித்து வருகின்றனர் . இந்த படத்தில் பிரதீப் ரங்கநாதனுக்கு அக்காவாக நயன்தாரா நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. அப்படி இந்த படத்தில் நயன்தாராவுக்கு அப்பாவாக சீமான் நடிக்க உள்ளதாக,
தகவல் வெளியாகி உள்ளது. மேலும் வித்தியாசமான கூட்டணியில் இந்த திரைப்படம் உருவாகியுள்ளதால் ரசிகர்கள் இந்த படத்திற்கு உச்சகட்ட எதிர்பார்ப்பில் இருந்து வருகின்றனர்…