விஜய் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகி வரும் ரியாலிட்டி நிகழ்ச்சிகள் தமிழ் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது என்றுதான் சொல்ல வேண்டும் . அப்படி விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிய ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் ரசிகர்களை அதிகம் கவர்ந்த நிகழ்ச்சி தான் பிக் பாஸ் நிகழ்ச்சி . கடந்த 2017 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த நிகழ்ச்சி இதுவரை 6 சீசன்களை வெற்றிகரமாக கடந்துள்ளது.
இதை அடுத்து சமீபத்தில் பிக் பாஸ் சீசன் 7 வெற்றிகரமாக தொடங்கப்பட்டது . மேலும் பிக் பாஸ் தொடங்கியதில் இருந்தே உலகநாயகன் கமல்ஹாசன் தான் இது நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார் . குறிப்பாக போட்டியாளர்கள் செய்யும் தவறுகளை சரியாக ,
சுட்டிக் காட்டுவார் கமல்ஹாசன். ஆனால் இந்த சீசனில் அப்படியே தலைகீழாக மாறிவிட்டது என்று தான் சொல்ல வேண்டும். அப்படி இந்த சீசனில் பெண்களுக்கு பாதுகாப்பில்லை என்று சொல்லி பிரதீப்பை அதிரடியாக வெளியேற்றினார் கமல்ஹாசன். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதனால் கமல் பல சர்ச்சைக்கு ஆளானது மட்டுமல்லாமல், ரசிகர்களின் கேலி, கிண்டலுக்கும் ஆளானார். அதோடு இத்தனை சீசன்களில் கிடைக்காத கெட்ட பெயர் இந்த சீசனில் கமல்ஹாசனுக்கு கிடைத்தது . இதனால் கமல்ஹாசன் இந்த சீசனோடு பிக் பாஸ் நிகழ்ச்சியை விட்டு,
வெளியேறுவதாக தகவல் வெளியாகி உள்ளது . இதனால் பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியை சிம்பு அல்லது ரம்யா கிருஷ்ணன் அல்லது வேறு யாராவது தொகுத்து வழங்கலாம் என்று கூறப்படுகிறது . ஆனால் இது எந்த அளவிற்கு உண்மை என்று தெரியவில்லை…