May 18, 2024

திடீரென சீரியலுக்கு தாவிய ரஜினி பட நடிகை ..!! பட வாய்ப்புகள் குவிந்து வரும் நிலையில் இப்படியொரு முடிவா ..?? யாருன்னு நீங்களே பாருங்க ..!!

பொதுவாகவே சினிமாவில் பட வாய்ப்பு குறைந்த உடன் தான் ஒரு சில நடிகைகள் சீரியலுக்கு வருவார்கள் . ஆனால் சினிமாவில் பல பட வாய்ப்புகள் குவிந்து வந்து கொண்டிருக்கும் வேளையில் சீரியலுக்கு தாவியுள்ளார் பிரபல ரஜினி பட நடிகை ஒருவர் . அவர் வேறு யாருமில்லை நடிகை ரம்யா கிருஷ்ணன் தான். தமிழ் சினிமா உலகில் ஒரு தவிர்க்க முடியாத நடிகையாக கலக்கிக் கொண்டு வரும் ,

ரம்யா கிருஷ்ணன் சமீபத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான ஜெயிலர் படத்தில் அவருடைய மனைவியாக நடித்திருந்தார்.  மேலும் இவர் தமிழ் மொழி மட்டுமல்லாமல் தற்போது தெலுங்கு மற்றும் ஹிந்தி மொழி படங்களிலும் பிஸியான நடிகையாக ,

கலக்கிக் கொண்டு வருகிறார் . குறிப்பாக ஜெயிலர் படத்திற்குப் பிறகு பெரிய பெரிய நடிகர்களுடன்  நடிகை  ரம்யா கிருஷ்ணன் இணைவார் என்று எதிர்பார்த்த நிலையில் தற்போது திடீரென சீரியலுக்கு தாவி உள்ளார் என்ற தகவல் வெளியாகி உள்ளது . அந்த வகையில் ,

ஏற்கனவே தமிழில் ஒளிப்பரப்பான தங்கம் ,ராஜகுமாரி , வம்சம் போன்ற சீரியல்களில் நடித்திருந்தார்  நடிகை ரம்யா கிருஷ்ணன் . இப்படி இருக்கும் நிலையில் ஆறு வருடங்கள் இடைவேளைக்குப் பிறகு ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாக உள்ள நள தமயந்தி என்ற,

சீரியலில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில்   நடிக்கிறாராம் நடிகை ரம்யா கிருஷ்ணன்.  தற்போது அந்த சீரியலில் நடித்திருந்த  நடிகை ரம்யா கிருஷ்ணனின் புகைப்படம் இணையத்தில் வெளியாகி உள்ளது…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *