April 29, 2024

பரம்பரையிலேயே யார் கிட்டயும் கார் இல்ல ..!! நான் தான் பஸ்ட் வாங்குறேன் ..!! ஜி பி முத்து வெளியிட்ட புகைப்படங்கள் ..!!

ஜி பி முத்து ஒரு பிரபலமான யூடியூபர் மற்றும் நடிகர் ஆவார் . ஆரம்பத்தில் டிக் டாக் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு பரிச்சயமான ஜி பி முத்து பின்னர் பிக் பாஸ் சீசன் சிக்ஸ்  நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பெரிய அளவில் பிரபலமானார் . குறிப்பாக இவருடைய கள்ளம் கபடம் இல்லாத மனசு எல்லோருக்குமே பிடித்திருந்தது என்று தான் சொல்ல வேண்டும் . அதுமட்டுமில்லாமல் தற்போது ,

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியிலும் போட்டியாளராக கலந்து கொண்டிருக்கிறார் ஜி பி முத்து.  இப்படி சின்னத்திரையில் கலக்கி கொண்டு வந்த ஜி பி முத்து வெள்ளித்திரையில் வெளியான துணிவு ,ஓ மை கோஸ்ட் உட்பட ,

பல திரைப்படங்களில் நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.  மேலும் யூடியூப்  வீடியோ போட்டு அதன் மூலம் நல்ல வருமானத்தை பார்த்து வரும் ஜி பி முத்து தற்போது புதிய கார் ஒன்றை வாங்கி இருக்கிறார் .  அந்தக் காரின் விலை சுமார் 12 முதல் 15 லட்சம் வரை இருக்கும் ,

என்று தகவல் வெளியாகி உள்ளது . அது மட்டுமில்லாமல் அவருடைய பரம்பரையிலேயே இவர்தான் முதன் முதலில்  கார் வாங்குகிறாராம் . அந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *