April 27, 2024

நண்பன் அட்லீ போல மாட்டிக்கொண்ட சிவகார்த்திகேயன் ..!! அயலான் இந்த ஹாலிவுட் படத்தின் காப்பியா ..?? என்ன அப்படியே இருக்கு ..!!

வருகின்ற பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியாக உள்ள திரைப்படம் தான் அயலான் . இன்று நேற்று நாளை என்ற சூப்பர் ஹிட் படத்தை கொடுத்திருந்த இயக்குனர் ஆர் ரவிக்குமார் இந்த படத்தை இயக்கியிருக்கிறார் . இந்த படத்தில் சிவகார்த்திகேயனுடன் இணைந்து ரகுல் ப்ரீத்தி சிங், ஈஷா கோபிகர் ,பானுப்ரியா, யோகி பாபு, கருணாகரன், பால சரவணன்,

முனீஸ் காந்த் ,ஜார்ஜ் மரியன் போன்ற பல பிரபலங்கள் நடித்துள்ளனர் . கே ஜி ஆர் ஸ்டுடியோஸ் தயாரித்த இந்த படத்திற்கு ஏ ஆர் ரகுமான் இசையமைத்துள்ளார் . மேலும் 2018 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த படத்தின் படப்பிடிப்பு பல வருடங்களாக நீண்டு கொண்டே போனது.

குறிப்பாக இந்த படத்தில் கிராபிக்ஸ் காட்சிகள் அதிக அளவில் உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது . இந்நிலையில் நேற்று இந்த படத்தின் டிரைலர் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது . இதை அடுத்து தற்போது அட்லீ போல பஞ்சாயத்தில் சிக்கியுள்ளார் சிவகார்த்திகேயன்.

அதாவது அயலான் திரைப்படம் கடந்த 2011 ஆம் ஆண்டு வெளியான பால் என்ற படத்தின் காப்பி என்று கூறப்படுகிறது . மேலும் இந்தப் படத்தில் தவறுதலாக பூமிக்கு வரும் ஏலியனை ஆராய்ச்சி செய்யும் கூட்டத்திடம் இருந்து காப்பாற்றி அதை மீண்டும் அவர்களுடைய கிரகத்துக்கே ,

அனுப்பி வைப்பது தான் கதை . இந்தப் படமும் காமெடி கடந்த கதை களத்தில் தான் எடுக்கப்பட்டுள்ளதாம் . தற்போது அயலான் ட்ரைலரும் அதே போல உள்ளதால் பால் படத்தின் காப்பி தான் அயலானா என்று பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *