April 22, 2024

சந்திரமுகி 2 வை ஊரே கழுவி ஊத்துது ..!! ஆனா, சூப்பர் என்ன சொன்னார் தெரியுமா ..?? வெளியான தகவலை பார்த்து ஷாக்கான ரசிகர்கள் ..!!

கடந்த 2005 ஆம் ஆண்டு இயக்குனர் பி வாசு இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான சூப்பர் ஹிட் திரைப்படம் தான் சந்திரமுகி . இந்தப் படத்தின் இரண்டாம் பாகத்தை சூப்பர் ஸ்டாரை வைத்து எடுக்க நினைத்தார் இயக்குனர் பி வாசு . ஆனால் அது நடக்காததால் கடைசியில் நடிகர் ராகவா லாரன்ஸை வைத்து எடுத்து முடித்துள்ளார் . இந்த படத்தில் ராகவா லாரன்ஸ் உடன் இணைந்து கங்கனா ரனாவத்,

ராதிகா, வடிவேலு ,மகிமா நம்பியார் ,லட்சுமிமேனன், சிருஷ்டி டாங்கே, மனோபாலா போன்ற பல நடிகர், நடிகைகள் நடித்துள்ளனர் . லைக்கா நிறுவனம் தயாரித்த இந்த திரைப்படம் நேற்று முன்தினம் வெளியாகி ரசிகர்களிடையே கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது .

மேலும் இந்தத் திரைப்படத்தை பார்த்த பலரும் சந்திரமுகி 2 எடுக்காமலேயே இருந்திருக்கலாம் என்று கழுவி ஊற்றி வருகின்றனர் . அப்படி இருந்தும் கூட இந்த திரைப்படம் இரண்டு நாளில் 20 கோடி வசூல் செய்து சாதனை படைத்துள்ளது . இப்படி ஊரே சந்திரமுகி 2 படத்தை கழுவி,

ஊத்தி வரும் நிலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இந்தப் படத்திற்கு தன்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்து உள்ளார் . அந்த வகையில் மிகப்பெரிய வெற்றிப்படமான தன்னுடைய சந்திரமுகியை , புதிதாக வேறு ஒரு கோணத்தில் ஒரு பிரம்மாண்டப் பொழுதுபோக்கு படமாக,

சினிமா ரசிகர்களுக்கு தந்திருக்கும் நண்பர் திரு வாசு அவர்களுக்கும் ,அருமையாக நடித்திருக்கும் தம்பி ராகவா லாரன்ஸ் அவர்களுக்கும், மற்றும் பட குழுவினர் அனைவருக்கும் என்னுடைய நல்வாழ்த்துக்கள் என்று கூறியிருந்தார்.  தற்போது அந்தப் பதிவு இணையத்தை கலக்கி கொண்டு வருகிறது…

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *