April 25, 2024

சத்தமே இல்லாமல் அடுத்த படத்தின் அறிவிப்பை வெளியிட்ட வடிவேலு..!! மீண்டும் ஒரு மாமன்னனா ..?? வைரலாகும் படத்தின் போஸ்டர் ..!!

பல வருடங்களாக நடிக்காமல் இருந்து வந்த வடிவேலு நாய் சேகர் ரிட்டன்ஸ் என்ற படத்தின் மூலம் ரீ என்ட்ரி கொடுத்திருந்தார் . இந்த படம் சொதப்பலில்  முடிந்தாலும் அதன் பிறகு வெளியான மாமன்னன் திரைப்படம் இவருக்கு மிகப்பெரிய அங்கீகாரத்தை பெற்று தந்தது என்று தான் சொல்ல வேண்டும்.  இந்த படத்தில் தன்னுடைய தரமான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார் வடிவேலு.

இந்நிலையில் சமீபத்தில் கேப்டன் விஜயகாந்தின் இறப்பிற்கு போகாததால் ரசிகர்கள் முதல் பிரபலங்கள் வரை பல பேர் வடிவேலுவை வறுத்தெடுத்து வருகின்றனர்.  இதனால் பல சர்ச்சைகளில் சிக்கினார் வடிவேலு . அப்படி இருந்தும் சத்தமே இல்லாமல் தன்னுடைய ,

அடுத்த படத்தின் அறிவிப்பை வெளியிட்டுள்ளார் வடிவேலு . இந்தப் படத்தில் அவருடன் இணைந்து பகத் பாசிலும் நடிக்க உள்ளாராம்.  இந்தப் படத்தின் பெயர் மாரீசன் . தற்போது அந்தப் படத்தின் போஸ்டர் இணையத்தை கலக்கிக்கொண்டு வருகிறது…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *