April 29, 2024

கேப்டனுக்காக நுரையீரல் என்ன..!! எது வேண்டுமானாலும் தருவேன்..!! அவர் எழுந்து வரணும் ..!! கண்ணீர் மல்க பேசிய விஜயகாந்தின் தீவிர ரசிகர் ..!!

தமிழ் சினிமாவை பொறுத்தவரை ஒரு சில நடிகர்கள்தான் நிஜத்திலும் நடிக்க தெரியாதவர்கள் . அதில் ஒருவர் தான் கேப்டன் விஜயகாந்த் அவர்கள் . தன்னுடைய படங்கள் மூலம் ரசிகர்களுக்கு என்ன சொல்ல நினைத்தாரோ , அதை நிஜத்திலும் செய்து காட்டினார் விஜயகாந்த் . இதனாலேயே இவருக்கு கோடான கோடி ரசிகர்கள் இருந்து வருகின்றனர் . இன்னும் சொல்லப்போனால் தற்போது ,

விஜயகாந்த் கைகாட்டினால்  தமிழ்நாட்டில் பாதி பேர் கிளம்பி வருவார்கள் . அந்த அளவிற்கு பணத்தை தாண்டி ரசிகர்களையும் சம்பாதித்து வைத்திருக்கிறார் விஜயகாந்த் . ஆனால் இவருடைய கெட்ட நேரமோ என்னமோ , தற்போது உடல் நலக்குறைவால் மருத்துவமனையில்,

தீவிர சிகிச்சை எடுத்து வருகிறார் . மேலும் அவருடைய உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் இருந்த நிலையில் இன்று திடீரென பின்னடைவு ஏற்பட்டுள்ளதாம். இப்படி இருக்கும் நிலையில் விஜயகாந்தின் தீவிர ரசிகர் ஒருவர் வீடியோ ஒன்றை வெளியிட்டு இருக்கிறார்.  அதில் நான் அரியலூர் மாவட்டத்தை,

சேர்ந்தவன் . நான் வெளிநாட்டில் வேலை செய்து கொண்டிருக்கிறேன்.  நான் கேப்டன் விஜயகாந்த் அவர்களின் தீவிர ரசிகன் . அவருக்கு உடல்நிலை சரியில்லை என்று கேள்விப்பட்டேன் . என்னுடைய கேப்டனுக்கு உடலில் ஏதாவது பிரச்சனை ஏற்பட்டு உறுப்புகள் தேவை என்றால் நுரையீரல்,

கல்லீரல்,  கிட்னி எதுவாக இருந்தாலும் நான் கொடுப்பதற்கு தயாராக இருக்கிறேன்.  என்னுடைய கேப்டன் மீண்டும் எழுந்து எங்களை பார்க்க வர வேண்டும் என்று கண்ணீர் மல்க பேசி இருந்தார் விஜயகாந்தின் தீவிர ரசிகர் . தற்போது அந்த வீடியோ இணையத்தில் தீயாய் பரவி வருகிறது…

 

 

View this post on Instagram

 

A post shared by Polimer News (@polimernews)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *