May 7, 2024

கேப்டன் ஆரோக்கியமாக தான் இருக்கிறார்..!! வீண் வதந்திகளை பரப்பாதீர்கள்..!! விஜயகாந்தின் லேட்டஸ்ட் புகைப்படத்தை வெளியிட்ட பிரேமலதா ..!!

தமிழ் சினிமா உலகில் ஒரு நடிகராகவும்,  அரசியல்வாதியாகவும் கலக்கிக்கொண்டு வந்தவர் கேப்டன் விஜயகாந்த் அவர்கள்.  குறிப்பாக இவர் நல்ல நடிகர் என்பதை தாண்டி நல்ல மனிதர் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்று தான் . அதனால் தான் அவர் வீட்டில் முடங்கி கிடந்த போதும் அவருக்காக பல ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கின்றனர்.  இப்படி இருக்கும் நிலையில் கடந்த இரண்டு வாரத்துக்கு முன்பு ,

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் விஜயகாந்த் . இதன் பிறகு இவருடைய உடல் நிலையில் பின்னடைவு ஏற்பட்டதாக செய்திகள் வெளியாகி ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது . இதன் பிறகு கேப்டன் நலமுடன் தான் இருக்கிறார் . அவர் செய்த தர்மம் கண்டிப்பாக,

அவரை காப்பாற்றும் என்று கூறியிருந்தார் விஜயகாந்தின் மனைவியான பிரேமலதா.  இப்படி இருக்கும் நிலையில் நேற்று திடீரென விஜயகாந்தின் உடல்நலையில் மீண்டும் பின்னடைவு ஏற்பட்டதாக தகவல் வெளியானது . அது மட்டுமல்லாமல் சினிமா பிரபலங்களான,

நாசர் , ஆர் கே செல்வமணி போன்றவர்கள்  மருத்துவமனைக்கே  சென்று விஜயகாந்தை நலம் விசாரித்து வந்தனர்.  இதனால் ரசிகர்கள் உச்சகட்ட பதட்டத்தில் இருந்து வந்தனர் . இப்படி இருக்கும் நிலையில் இதற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் கேப்டனின் ,

லேட்டஸ்ட் புகைப்படத்தை வெளியிட்டு விஜயகாந்த் ஆரோக்கியமாக தான் இருக்கிறார்,  வீண் வதந்திகளை யாரும் பரப்பாதீர்கள் என்று கூறியிருந்தார் பிரேமலதா . இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் தற்போது ஆறுதல் அடைந்து வருகின்றனர்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *