May 9, 2024

நேற்றுவரை இயக்குனர் இன்று முதல் முதலாளி ..!! புதிய தொழிலை தொடங்கிய லோகேஷ் ..!! வாழ்த்து சொல்லும் ரசிகர்கள் ..!!

லோகேஷ்  கனகராஜ் ஒரு பிரபலமான தமிழ் திரைப்பட இயக்குனர் ஆவார்.  குறும்படங்களை இயக்கி பிரபலமான லோகேஷ் கனகராஜ் கடந்த 2017 ஆம் ஆண்டு வெளியான மாநகரம் என்ற படத்தின்  மூலம் இயக்குனராக அறிமுகமானார்.  இப்படி வெளியான முதல் படத்திலேயே முத்திரையை பதித்த லோகேஷ் கனகராஜ் பின்னர் இந்த படத்தை தொடர்ந்து கார்த்தியை வைத்து கைதி, விஜய்யை வைத்து  மாஸ்டர் ,

கமலை வைத்து விக்ரம், மீண்டும் விஜய்யை வைத்து  லியோ போன்ற சூப்பர் ஹிட் படங்களை இயக்கியிருந்தார் . இப்படி தவிர்க்க முடியாத இயக்குனராக கலக்கி கொண்டு வந்த இயக்குனர் லோகேஷ் கனகராஜ் விரைவில் தயாரிப்பாளர் அவதாரம் எடுக்க உள்ளாராம் .

அந்த வகையில் தற்போது ஜி ஸ்குவாட் என்ற தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கி இருக்கிறார் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் . அந்த அறிவிப்பை தற்போது வெளியிட்டுள்ள லோகேஷ்க்கு திரைப்பிரபலங்களும், ரசிகர்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *