April 29, 2024

ரஜினி பட பிரபலம் திடீர் மரணம் ..!! ஒரு காலத்தில் எப்படி இருந்த மனுஷன் ..!! இரங்கல் தெரிவிக்கும் திரைப்பிரபலங்கள் ..!!

ஒரு காலகட்டத்தில் தமிழ் சினிமாவில் ஓர் தவிர்க்க முடியாத தயாரிப்பாளராக இருந்து வந்தவர் தான் தயாரிப்பாளர் வி ஏ துரை அவர்கள் . இயக்குனர் பாலா இயக்கத்தில் சூர்யா , விக்ரம் நடிப்பில் வெளியான பிதாமகன், விஜயகாந்த் நடிப்பில் வெளியான கஜேந்திரா ,சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான பாபா , சத்யராஜ் நடிப்பில் வெளியான லூட்டி போன்ற பல திரைப்படங்களை,

தயாரித்திருக்கிறார் தயாரிப்பாளர் வி ஏ துரை அவர்கள் . ஆனால் இத்தனை படங்களை தயாரித்தும் கூட இவருக்கு நஷ்டமானது தான் மிச்சம் . இப்படி இருந்த நிலையில் சமீபத்தில் நீரழிவு நோயால் பாதிக்கப்பட்டு இருந்தார் தயாரிப்பாளர் வி ஏ துரை.

இதனால் அவருடைய ஒரு காலும் அகற்றப்பட்டது.  இதன் பிறகு  சிகிச்சைக்கு கூட பணம் இல்லாமல் தவித்து வந்தார் தயாரிப்பாளர் வி ஏ துரை . இதன்பிறகு தமிழ் சினிமாவை சேர்ந்த ஒரு சில பிரபலங்கள் அவருக்கு உதவி செய்து வந்தனர்.  இப்படி இருக்கும் நிலையில் ,

நேற்று சிகிச்சை பலனின்றி இறந்துவிட்டாராம் தயாரிப்பாளர் வி ஏ துரை . தற்போது இவருடைய திடீர் மறைவுக்கு திரைப்பிரபலங்களும் , ரசிகர்களும் தங்களுடைய இரங்கலை தெரிவித்து வருகின்றனர் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *