April 28, 2024

சந்திரமுகி 2 படத்தின் பட்ஜெட் 65 கோடி ..!! ஆனால், மொத்த வசூல் இவ்வளவு தானா ..?? தலையில் துண்டைபோட்ட தயாரிப்பாளர் ..!!

கடந்த 2005 ஆம் ஆண்டு இயக்குனர் பி வாசு இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான சந்திரமுகி திரைப்படம் ஏகபோக வரவேற்பை பெற்றது.  இப்போது வரை இந்த படத்தை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர் .  இந்த காரணத்தினால் இந்த படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்க நினைத்தார் இயக்குனர் பி வாசு.  அந்த வகையில் சூப்பர் ஸ்டார் மறுத்ததால் ராகவா லாரன்ஸ்சை வைத்து,

சந்திரமுகி 2 படத்தை எடுத்து முடித்தார் இயக்குனர் வாசு . அந்த வகையில் லைக்கா நிறுவனம் தயாரிப்பில் உருவான இந்த படத்தில் ராகவா லாரன்ஸ் உடன் இணைந்த கங்கனா ரனாவத் , லட்சுமிமேனன் ,வடிவேலு, ராதிகா சரத்குமார் ,மகிமா நம்பியார் , சிருஷ்டி  பாங்கே,

ரவி மரியா ,மனோபாலா போன்ற பல நடிகர் ,நடிகைகள் நடித்திருந்தனர் .  இந்த படத்திற்கு ஆஸ்கார் வென்ற எம் எம் கீரவாணி  இசையமைத்திருந்தார் .  மேலும் மிகப்பெரிய எதிர்பார்ப்பில் உருவான இந்த திரைப்படம் கலவையான விமர்சனங்களையே பெற்றது . இன்னும் சொல்லப்போனால் ,

சந்திரமுகி படத்தின் பெயரையே இந்த படம் கெடுத்து விட்டது என்றும் பலரும் கூறி வருகின்றனர் . இந்நிலையில் இந்த திரைப்படம் இதுவரை செய்த வசூல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது . அந்த வகையில் 60 – 65 கோடி பட்ஜெட்டில் உருவான இந்த திரைப்படம் இதுவரை,

51.5 கோடி மட்டும் தான் வசூலித்துள்ளதாம் . இன்னும் இந்தப் படத்தின் பட்ஜெட்டை கூட சந்திரமுகி 2 திரைப்படம் வசூல் செய்யவில்லை . ஆனால் சந்திரமுகி 2 பட குழுவினர் இந்த திரைப்படம் 100 கோடி வசூல் செய்யும் என்று எதிர்பார்த்தார்களாம்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *