April 25, 2024

விடாமுயற்சி படத்தில் இரண்டு ஹீரோயின்களா ..?? ஒண்ணு திரிஷா இன்னொன்னு இந்த இளம் நடிகையா ..?? இது நம்ம லிஸ்ட்டிலேயே இல்லையே ..??

தற்போது தமிழ் சினிமா உலகில் உள்ள எல்லா நடிகர்களின் படங்களும் ரிலீசுக்கு தயாராகி வரும் நிலையில் அஜித்தின் படம் இன்னும் தொடங்காமலேயே இருக்கிறது.  அந்த வகையில் துணிவு படத்திற்கு பிறகு இயக்குனர் மகிழ் திருமேனி இயக்க உள்ள விடாமுயற்சி படத்தில் ஹீரோவாக கமிட்டானார் நடிகர் அஜித்.  இந்த படத்தின் அறிவிப்பை எந்த நேரத்தில் வெளியிட்டார்கள் தெரியவில்லை .

இன்னும் இந்த படப்பிடிப்பு தொடங்காமல் இருந்து வந்தது . இதை அடுத்து கடந்த சில நாட்களுக்கு முன்பு இந்த படத்தின் படப்பிடிப்பு துவங்கியதாக தகவல் வெளியானது . மேலும் லைக்கா நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்தில் அஜித்துக்கு ஜோடியாக நடிகை திரிஷா நடிக்க உள்ளார் ,

என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான் . ஆனால் விடாமுயற்சி படத்தில் இரண்டு நடிகைகளாம் . ஒண்ணு திரிஷா இன்னொன்னு இந்த இளம்  நடிகை யாம் . அவர் வேறு யாருமில்லை நடிகை சம்யுக்தா மேனன் தான் . மலையாள படத்தின் மூலம் தன்னுடைய திரை பயணத்தை தொடங்கிய,

சம்யுக்தா மேனன் கடந்த 2018 ஆம் ஆண்டு வெளியான களரி என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு நடிகையாக அறிமுகமானார்.  பின்னர் இந்த படத்தை தொடர்ந்து ஜூலை காற்றில், வாத்தி போன்ற படங்களிலும் நடித்திருந்தார் நடிகை சம்யுக்தா மேனன்.  மேலும் இவர் தமிழ் ,

தெலுங்கு மற்றும் மலையாள மொழி படங்களிலும் கலக்கி கொண்டு வருகிறார்.  இதையடுத்து தற்போது விடாமுயற்சி படத்திலும் கமிட் ஆகியுள்ளார் நடிகை சம்யுக்தா . இதை பார்த்த ரசிகர்கள் இது நம்ம லிஸ்ட்டிலேயே இல்லையே என்று கூறி வருகின்றனர்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *