April 28, 2024

இந்த குதிரைக்கு ஓய்வே கிடையாது ..!! அடுத்த படத்தில் கமிட்டான சூப்பர் ஸ்டார் ..!! வைரலாகும் புகைப்படங்கள் ..!!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஒரு தவிர்க்க முடியாத தமிழ் திரைப்பட முன்னணி நடிகர் ஆவார் . கிட்டத்தட்ட 48 வருடங்களுக்கு மேலாக தமிழ் சினிமாவில் பயணித்து நம்பர் ஒன் நடிகர் என்ற அந்தஸ்தில் பயணித்து வரும்  ரஜினிகாந்த் இதுவரை பல சூப்பர் ஹிட் படங்களை கொடுத்திருக்கிறார் . அந்த வகையில் சமீபத்தில் இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் ,

வெளியான ஜெயிலர் திரைப்படம் பிரம்மாண்ட வெற்றி படமாக அமைந்தது மட்டுமல்லாமல் வசூலிலும் சாதனை படைத்தது. இந் நிலையில் அடுத்ததாக ஜெய் பீம் பட இயக்குனரான டிஜே ஞானவேல் இயக்க உள்ள தலைவர் 170 என்ற படத்தில் நடிக்க இருக்கிறார் நடிகர் ரஜினிகாந்த்.

இந்த படத்தில் ரஜினியுடன் இணைந்து அமிதாப்பச்சன், ராணா ரகுபதி ,பகத் பாசில் ,மஞ்சு வாரியர், ரித்திகா சிங், துஷாரா விஜயன், விஜய் டிவி தொகுப்பாளரான ரக்சன் போன்ற பல பிரபலங்கள் நடிக்க உள்ளனர்.  லைக்கா நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு அனிருத் ,

இசையமைக்க உள்ளார் . இப்படி இருக்கும் நளியில் இந்த படத்தின் பூஜை நேத்து நடைபெற்று உள்ளது . அந்தப் புகைப்படங்கள் தற்போது இணையத்தை கலக்கிக் கொண்டு வருகிறது. இதோ அந்த புகைப்படங்களை நீங்களும் பாருங்க …

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *