May 8, 2024

ரசிகர்களுக்கு குட் நியூஸ் சொன்ன ” குக் வித் கோமாளி ” புகழ் ..!! கல்யாணமாகி ஒரு வருஷம் ஆச்சு ..!! புகைப்படத்தை வெளியிட்டு இன்பதிர்ச்சி கொடுத்த புகழ் ..!!

பொதுவாகவே விஜய் தொலைக்காட்சியில் இருந்து பல தரமான கலைஞர்கள் உருவாகி வருகின்றனர் . அந்த வகையில் பல பேரை கூறலாம் . அந்த வரிசையில் ஒருவர் தான் புகழ் . அப்படி கலக்கப்போவது யாரு என்ற நிகழ்ச்சியின் மூலம் போட்டியாளராக கலந்து கொண்டு ரசிகர்களை வெகுவாக கவர்ந்த ரசிகர்களிடையே பெரிய அளவில் பிரபலமானது குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் தான்.

இதன் பிறகு தான் பட்டித் தொட்டி எங்கும் பிரபலமானார் புகழ் . இப்படி சின்னத்திரையில் கலக்கி கொண்டு வந்த புகழ் வெள்ளித்திரையில் வெளியான சிக்ஸர், சபாபதி ,என்ன சொல்லப் போகிறாய், வலிமை ,எதற்கும் துணிந்தவன், யானை, ஏஜென்ட் கண்ணாயிரம் ,அயோத்தி ,

போன்ற பல திரைப்படங்களில் காமெடி நடிகராக நடித்திருந்தார். அது மட்டுமல்லாமல் தற்போது மிஸ்டர் ஜூ கீப்பர் என்ற படத்தில் ஹீரோவாக நடித்துக் கொண்டு வருகிறார் புகழ் .  இதனிடையே கடந்த வருடம் தன்னுடைய நீண்ட நாள் காதலியான பென்சி என்பவரை திருமணம்,

செய்து கொண்டார் புகழ் . இப்படி இருக்கும் நிலையில் திருமணமாகி ஒரு வருடம்  கழித்து ரசிகர்களுக்கு குட் நியூஸ் சொல்லியுள்ளார் குக் வித் கோமாளி புகழ் . அந்த வகையில் தற்போது தன்னுடைய மனைவி கர்ப்பமாக இருப்பதை தன்னுடைய சமூக வலைத் தளப்பக்கத்தில்,

புகைப்படத்துடன் அறிவித்துள்ளார் புகழ்.  அந்த புகைப்படம் தற்போது இணையத்தை கலக்கிக் கொண்டு வருகிறது.  இதைப்பார்த்த ரசிகர்கள் புகழ் பென்சி ஜோடிக்கு தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். இதோ புகழின் பதிவு …

 

 

View this post on Instagram

 

A post shared by Vijay Tv Pugazh (@vijaytvpugazh)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *