சமந்தா தனுஷ் மாதிரியே வாழ்ந்து வரும் இந்த நடிகை யாருன்னு தெரியுமா ..?? ஒரு நாள் பாத்து சொல்லும் விஜய் சேதுபதி பட நடிகை எடுத்த திடீர் முடிவு ..?? இதெல்லாம் எங்க போய் முடிய போகுதோ ..??
சினிமா பிரபலங்கள் பெரும் பாலானோர் திருமண வாழ்க்கையை நிரந்தரமாக்க முடியாமல் சில கருத்து வேறுபாட்டால் அதை முறித்துக்கொள்வார்கள். அந்தவகையில் நடிகை சமந்தா, காதலித்து திருமணம் செய்து கொண்ட நடிகர் நாக சைதன்யாவை 4 ஆண்டுகள் கழித்து விவாகரத்து பெற்று பிரிந்தார்.
அவரை தொடர்ந்து நடிகர் தனுஷ், ரஜினி மகள் ஐஸ்வர்யாவுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் பிரிந்து வாழ்வதாக கூறி அறிக்கையை வெளியிட்டு ஷாக் கொடுத்தார். இந்நிலையில் மெகா சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவியின் தம்பி மகளும் விவாகரத்து செய்யவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் நடித்து பிரபலமானவர் தான் நடிகை நிஹாரிகா. சிரஞ்சீவியின் தம்பி மகளாக சினிமாவில் அறிமுகமாகி தமிழில் நடிகர் விஜய் சேதுபதியின் ஒரு நல்ல நாள் பார்த்து சொல்றேன் படத்தில் மூலம் கெளதம் கார்த்திக்கிற்கு ஜோடியாக நடித்தார்.
அதன்பின் 2020ல் சைதன்யா ஜொன்னலகடா என்பவரை திருமணம் செய்து கொண்டார் நிஹாரிகா. தற்போது இருவருக்கும் பிரச்சனை ஏற்பட்டதாகவும் கணவரின் புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இருந்து நீக்கிவிட்டதாகவும் கூறப்படுகிறது. விரைவில் விவாகரத்தும் செய்யவுள்ளதாக டோலிவுட் வட்டாரத்தில் பேசப்பட்டு வருகிறது.