அந்நியன் படத்திற்காக நடிகர் விக்ரம் வாங்கிய சம்பளம் ..?? எவ்வளவு தெரியுமா..?? இவளோ கம்மியா தான் கொடுத்தாங்க ..?? இதுக்கு இவருதான் காரணம் ..??
விக்ரம் என்பவர் தமிழ்நாட்டுத் திரைப்பட நடிகர், திரைப்படத் தயாரிப்பாளர், பின்னணிப் பாடகர் மற்றும் குரல் நடிகர் ஆவார். இவர் 1990 ஆம் ஆண்டு முதல் சேது , விண்ணுக்கும் மண்ணுக்கும் , சாமி , பிதாமகன் , ஐ போன்ற தமிழ் மொழி திரைப்படங்களிலும், தெலுங்கு மற்றும் மலையாளத் திரைப்படங்களிலும் நடித்ததன் மூலம் தமிழ்த் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவராவார்.
இவர் தமிழ்த் திரைப்படத் துறையில் பணி புரிந்த வரையில் 7 பிலிம்பேர் விருதுகள் பெற்றுள்ளார். அது மட்டுமின்றி சிறந்த நடிகருக்கான ஒரு தேசிய விருதும் தமிழ் நாடு மாநில விருதும் பெற்றுள்ளார். பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கரின் இயக்கத்தில்
வெளிவந்த திரைப்படம் அந்நியன். மாறுபட்ட நடிப்பின் மூலம் ரசிகர்களை கவர்ந்த ஹீரோ விக்ரம். மேலும் கதாநாயகியாக சதா, முக்கிய கதாபாத்திரங்களில் பிரகாஷ் ராஜ், விவேக் என பல நட்சத்திரங்கள் இப்படத்தில் நடித்திருந்தனர். அந்நியன், அம்பி, ரெமோ
என மூன்று விதமாக நடித்து அசத்திய சியான் விக்ரம் இப்படத்தின் மூலம் மாபெரும் வெற்றியை தனது திரை வாழ்க்கையில் கண்டார். இந்நிலையில், இவ்வளவு பெரிய வெற்றியை அடைந்த விக்ரம் இப்படத்தில் நடிப்பதற்காக ரூ. 2.5 கோடி சம்பளம் வாங்கியுள்ளார்.
என தகவல் வெளியாகியுள்ளது. சியான் விக்ரம் தற்போது பா. ரஞ்சித் இயக்கத்தில் தங்கலான் படத்தில் நடித்து வருகிறார். மேலும் இவர் நடிப்பில் உருவாகியுள்ள பொன்னியின் செல்வன் 2 திரைப்படம் ஏப்ரல் 28 வெளியாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.