80 , 90 களின் ரசிகர்களுக்கு மிகவும் பரிச்சயமான நடிகைகளில் ஒருவர் தான் நடிகை குஷ்பூ . கடந்த 1988 ஆம் ஆண்டு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான தர்மத்தின் தலைவன் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு நடிகையாக அறிமுகமானார் நடிகை குஷ்பூ . பின்னர் இந்த படத்தைத் தொடர்ந்து வருஷம் 16 ,கிழக்கு வாசல் ,மைக்கேல் மதன காமராஜன், சின்னத்தம்பி , ரிக்சா மாமா, சிங்காரவேலன் ,அண்ணாமலை,
போன்ற பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்திருந்தார் நடிகை குஷ்பூ . மேலும் நடிகை குஷ்பூ தமிழ் சினிமாவை கலக்கி வந்த பல முன்னணி நடிகர்களுடன் நடித்திருக்கிறார் . அதோடு இவர் தமிழ் மொழி மட்டுமல்லாமல் தெலுங்கு ,மலையாளம் , கன்னடம் மற்றும் இந்தி மொழி படங்களிலும் நடித்திருக்கிறார் .
இப்படி நடித்துக் கொண்டிருக்கும் போதே கடந்த 2000 ஆண்டு இயக்குனர் சுந்தர் சியை காதலித்து திருமணம் செய்து கொண்டார் நடிகை குஷ்பூ . திருமணமான இ வர்களுக்கு இரண்டு மகள்கள் உள்ளனர் . திருமணத்துக்கு பிறகு வெள்ளித்திரை மற்றும் சின்னத்திரையில் கலக்கிக் கொண்டு வருகிறார் நடிகை குஷ்பூ .
. அந்த வகையில் தற்போது தமிழ் படங்களில் குணசித்திர கதாபாத்திரத்திலும் நடித்துக்கொண்டு வருகிறார் நடிகை குஷ்பூ . அதோடு சமீப காலமாக அரசியலிலும் அதிக ஆர்வம் காட்டி வருகிறார் நடிகை குஷ்பூ. இப்படி இருக்கும் நிலையில் தன்னுடைய ஹேர் ஸ்டைலை மாற்றி இருக்கிறார் நடிகை குஷ்பூ .
தற்போது அந்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது . இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் குஷ்பூ வா இது.? மீண்டும் 20 வயதுக்கே போய்விட்டார் போல என்று கூறி வருகின்றனர். இதோ அந்த புகைப்படம் நீங்களும் பாருங்க …