May 1, 2024

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் பொண்டாட்டி ..!! பிறந்தநாளில் ரொமன்ஸ் புகைப்படங்களை வெளியிட்ட அசோக் செல்வன் ..!!

கீர்த்தி பாண்டியன் ஓர் வளர்ந்து வரும் தமிழ் திரைப்பட நடிகை ஆவார் . நடிகரும் , அரசியல்வாதியுமான அருண்பாண்டியனின் மகளான கீர்த்தி பாண்டியன் கடந்த 2019 ஆம் ஆண்டு வெளியான தும்பா என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு நடிகையாக அறிமுகமானார் . பின்னர் இந்த படத்தைத் தொடர்ந்து அன்பிற்கினியாள், கண்ணகி போன்ற பல திரைப்படங்களில் நடித்திருந்தார் .

குறிப்பாக ப்ளூ ஸ்டார் படத்தில் நடிக்கும் போது இவருக்கும் , அசோக் செல்வனுக்கும் இடையே காதல் மலர்ந்தது .பின்னர் அந்தப் படம் வெளியாவதற்கு முன்பே இருவரும் திருமணமும் செய்து கொண்டனர்.  இப்படி இருக்கும் நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு ,

தன்னுடைய பிறந்தநாளை கொண்டாடி இருக்கிறார் நடிகை கீர்த்தி பாண்டியன் . அதற்கு வாழ்த்து சொல்லும் வகையில் தன்னுடைய மனைவியை தூக்கி இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் என் இனிய பொண்டாட்டி என்று பகிர்ந்துள்ளார்,

நடிகர் அசோக் செல்வன் . அந்தப் புகைப்படங்கள் தற்போது இணையத்தை கலக்கிக்கொண்டு வருகிறது . இதை பார்த்த ரசிகர்கள் கீர்த்தி பாண்டியனுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை கூறி வருகின்றனர் . இதோ அந்த புகைப்படங்களை நீங்களும் பாருங்க…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *