April 25, 2024

காதலர் தினத்தில் குட் நியூஸ் சொல்லப்போகும் அஜித் ..!! இதுக்கு தானே தமிழ்நாடே காத்திருக்குது ..!!

கடைசியாக அஜித் நடிப்பில் வெளியான துணிவு திரைப்படம் வெளியாகி கிட்டத்தட்ட ஒரு வருடங்களுக்கு மேல் ஆகிவிட்டது . ஆனால் அதன் பிறகு அஜித்தின் விடாமுயற்சி குறித்த எந்த அப்டேட்டும் வெளியாகவில்லை . அந்த வகையில் இயக்குனர் மகிழ் திருமேனி இயக்கத்தில் உருவாகி வரும் விடாமுயற்சி படத்தில் அஜித்துடன் இணைந்து அர்ஜுன் ,திரிஷா ,ரெஜினா,  ஆரவ் போன்ற பல பிரபலங்கள் நடித்து வருகின்றனர்.

லைக்கா நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்க உள்ளாராம் . இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த அக்டோபர் மாதமே தொடங்கியது . ஆனால் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கி  4  மாதங்கள் ஆகியும் இப்போது வரை இந்த படம் குறித்த ,

ஒரு அப்டேட் கூட வெளியாகவில்லை.  மேலும் தமிழ் சினிமாவை கலக்கி வரும் எல்லா நடிகர்களோட படங்களின் அப்டேட் வெளியாகியும் அஜித் படத்தின் அப்டேட் ஒண்ணு கூட வெளியாகாததால் அஜித் ரசிகர்கள் மிகுந்த சோகத்தில் இருந்து வந்தனர்.  இதை அடுத்து தற்போது ,

காதலர் தினத்தன்று ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்க உள்ளாராம் அஜித்.  அது என்னவென்றால் காதலர் தினத்தை முன்னிட்டு விடாமுயற்சி படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது . அதோடு இந்த திரைப்படம் ,

கோடை விடுமுறைக்கு வெளியாகலாம் என்றும் கூறப்படுகிறது  இதைப் பார்த்த அஜித் ரசிகர்கள் தற்போது கொண்டாட்டத்தில் துள்ளி குதித்து வருகின்றனர்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *