April 27, 2024

“பிக்பாஸ் ” போட்டியாளரான நடிகை விசித்ராவின் குடும்ப புகைப்படங்கள் இதோ ..!!

விசித்ரா ஓர் பிரபலமான தமிழ் திரைப்பட நடிகை ஆவார் . கடந்த 1991 ஆம் ஆண்டு வெளியான போர் கொடி என்ற படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார் விசித்ரா . இருந்தாலும் இவர் ரசிகர்களிடையே பெரிய அளவில் பிரபலமானது தலைவாசல் என்ற படத்தில் மூலம் தான்.  பின்னர் இந்த படத்தை தொடர்ந்து தேவர் மகன் ,அமராவதி, ரசிகன், வீரா ,அமைதிப்படை ,முத்து,

வில்லாதி வில்லன் ,பெரிய குடும்பம் , எட்டுப்பட்டி ராசா போன்ற பல திரைப்படங்களில் நடித்திருந்தார் நடிகை விசித்ரா . குறிப்பாக ஆரம்பத்தில் இருந்தே கவர்ச்சி நடிகையாகவே தமிழ் சினிமாவில் கலக்கிக் கொண்டு வந்தார் நடிகை விசித்ரா . மேலும் இவர் தமிழ் மொழி,

மட்டுமல்லாமல் தெலுங்கு மற்றும் மலையாள மொழி படங்களிலும் நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது . இதனிடையே ஷாஜி என்பவரை திருமணம் செய்து கொண்ட விசித்ராவுக்கு மூன்று மகன்கள் உள்ளனர்.  மேலும் திருமணத்துக்கு பிறகு நடிக்காமல் இருந்து வந்த விசித்ரா,

தற்போது பிக் பாஸ் சீசன் 7 போட்டியாளராக கலந்து கொண்டுள்ளார் . குறிப்பாக சமீபத்தில் இவர் பேசிய கருத்து இவருக்கு எதிராக அப்படியே திரும்பியது.  இந்நிலையில் பலரும் பார்த்திடாத நடிகை விசித்ராவின் குடும்ப புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளது…

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *