May 4, 2024

முதல் நாளிலேயே மண்ணை கவ்விய லால் சலாம் ..!! சூப்பர் ஸ்டார் நடிச்சும் கூட இப்படியொரு நிலைமையா ..?? வெளிவந்த வசூல் விபரம் ..!!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மூத்த மகளான ஐஸ்வர்யா பல வருடங்கள் இடைவேளைக்குப் பிறகு லால் சலாம் என்ற படத்தின் மூலம் மீண்டும் இயக்குனர் அவதாரம் எடுத்தார் . இந்த படத்தில் விஷ்ணு விஷால் ,விக்ராந்த், விக்னேஷ் ,லிவிங்ஸ்டன், செந்தில் ,ஜீவிதா, கே எஸ் ரவிக்குமார், தம்பி ராமையா, நிரோஷா ,அனந்திகா போன்ற பிரபலங்கள் நடித்திருந்தனர்.  இந்தப் படத்தில் ஒரு சிறப்பு கதாபாத்திரத்தில் ,

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்திருந்தார் . லைக்கா நிறுவனம் தயாரித்த இந்த படத்திற்கு ஏ ஆர் ரகுமான் இசையமைத்திருந்தார் . மேலும் கிரிக்கெட் விளையாட்டு போட்டியை மையமாக வைத்து உருவான இந்த படத்திற்கு ஓரளவிற்கு எதிர்பார்ப்பு இருந்தது .

ஆனால் இந்த திரைப்படம் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ததா என்று கேட்டால் பூர்த்தி செய்யவில்லை என்று தான் சொல்ல வேண்டும்.  காரணம் என்னதான் தரமான கதைக்களத்தை ஐஸ்வர்யா கையில் எடுத்தாலும் இயக்குவதில் கொஞ்சம் சொதப்பியதாக ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

இன்னும் சொல்லப்போனால் கதாபாத்திரங்களை வடிவமைப்பதிலும் ஐஸ்வர்யா சொதப்பி விட்டாராம் . இதனால் இப்படி வெளியான இந்த திரைப்படம் முதல் நாளில் தமிழ்நாட்டில் நான்கு கோடியும் ,உலக அளவில் மொத்தமாக 7 கோடியும் வசூல் செய்துள்ளதாம்.

குறிப்பாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்ததால் தான் இவ்வளவு வசூல் வந்ததாகவும் கூறப்படுகிறது.  ஆனால் கடைசியாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான ஜெயிலர் திரைப்படம் முதல் நாளிலேயே 100 கோடி வசூல் செய்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *