April 25, 2024

சூரிக்கு இப்படியொரு ஜோடியா ..?? எல்லாம் வெற்றிமாறனால் வந்த யோகம் ..!! இனி இவரை கையிலேயே பிடிக்க முடியாது ..!!

காமெடியனாக இருந்து இன்று ஹீரோவாக கலக்கிக்கொண்டு வருகிறார் நடிகர் சூரி.  ஆரம்பத்தில் சிறுசிறு கதாபாத்திரங்களில் நடித்து வந்த சூரி வெண்ணிலா கபடி குழு என்ற படத்தில் மூலம் பெரிய அளவில் பிரபலமானார் . இந்த படத்தில் இவர் 50 பரோட்டா சாப்பிட்ட காட்சியை இன்றளவும் ரசிகர்கள் மறந்திருக்க மாட்டார்கள் . இதன் பிறகு படிப்படியாக உயர்ந்து முன்னணி காமெடி நடிகர் என்ற அந்தஸ்தை பெற்றார் சூரி .

இப்படி தவிர்க்க முடியாத காமெடியனாக கலக்கிக்கொண்டு வந்த சூரி கடந்த வருடம் இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியான விடுதலை என்ற படத்தின் மூலம் கதாநாயகன் ஆனார்.  இந்த திரைப்படம் இவருக்கு மிகப்பெரிய அங்கீகாரத்தை பெற்று தந்தது,

என்று தான் சொல்ல வேண்டும் . இந்த படத்திற்கு பிறகு இவருக்கு தொடர்ச்சியாக ஹீரோ வாய்ப்பு அமைந்து வருகிறது . அந்த வகையில் தற்போது விடுதலை பார்ட் 2 , கருடன் போன்ற படங்களில் நடித்துக்கொண்டு வருகிறார் . இதில் கருடன் திரைப்படத்தை எதிர்நீச்சல், காக்கி சட்டை,

கொடி போன்ற சூப்பர் ஹிட் படங்களை இயக்கிய இயக்குனர் துரை செந்தில்குமார் இயக்கி வருகிறார்.  இந்த படத்தில் சூரிக்கு ஜோடியாக இளம் நடிகை ஒருவர் கமிட் ஆகியுள்ளாராம் . அவர் வேறு யாருமில்லை ரேவதி சர்மா தான்.  இவர் தமிழில் கெளதம் கார்த்திக் வெளியான ,

ஆகஸ்ட் 16 1947 என்ற படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது . அது மட்டுமல்லாமல் காமெடியனாக பார்த்த சூரியின்  ரொமான்ஸ் வீடியோ தற்போது இணையத்தில் வெளியாகியுள்ளது…

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *