தனுஷ் பத்தி சொன்னது ..??அப்ப அது வதந்தி இல்லையா உண்மைதானா..?? பல கோடி வியாபாரமான கேப்டன் மில்லருக்கு தனுஷால் வந்த சோதனை..??அடுத்தது இந்த படத்துக்கு கிளம்பி விடுவாரோ..!!
தனுஷ் ரொம்ப பிஸியாக கோலிவுட், பாலிவுட் என கலக்கிக் கொண்டிருக்கிறார். சமீபத்தில் திருச்சிற்றம்பலம் படம் ஹிட் அடித்ததால் அவர் மார்க்கெட்டும் எங்கேயோ போய்விட்டது. இப்பொழுது அவர் நடித்துக் கொண்டிருக்கும் படம் கேப்டன் மில்லர். பீரியட் ஜானரில் உருவாகும் இந்த படத்தை ச த்யஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில் பிரம்மாண்டமான பொருட்களின் தயாரிக்கிறது. இந்த படத்திற்கான படப்பிடிப்பு தென்காசி,
கேரளா உள்ளிட்ட பகுதிகளில் உ ள்ள காடுகளில் நடத்தப்பட்ட நிலையில் திடீரென்று அந்த படத்தின் சூட்டிங் நிறுத்தப் படுவதாக சொல்லப்பட்டது. ஆனால் கனமழை காரணமாக தான் படம் நிறுத்தப்பட்டது என்றும் படத்தின் சூட்டிங் நிறுத்தப்படவில்லை என்பதை மேக்கிங் பிலிப்ஸ் வீடியோ உடன் தனுஷின் மாஸ் கெட்டப்பை
மீபத்தில் வெளியிட்டு படக்குழு அந்த வதந்திகளுக்கு எல்லாம் முற்றுப்புள்ளி வைத்தது. ஆனால் இப்போது அந்த வதந்தி எல்லாம் உண்மை தான் என்ற தகவல் வெளியாகி உள்ளது. ஏனென்றால் ஷூட்டிங் தொடங்குவதற்கு முன்னரே இந்த படம் நல்ல வியாபாரம் ஆனது . ஆனால் இந்த படத்தில் ஏற்பட்ட திடீர் பிரச்சினையால்
தனுஷ் சொந்தமாக டிக்கெட் போட்டு படப்பிடிப்பிலிருந்து சென்னைக்கு கிளம்பி வந்து விட்டார். வியாபாரம் ஆன படத்துக்கு இப்படி ஒரு பிரச்சினையா என்று தனுசை சமாதான ப்படுத்தி வருகின்றனர். இந்த படம் நல்ல வியாபாரம் ஆனது. ஆகையால் இன்னும் கொஞ்சம் பிரம்மாண்டப்படுத்தி படத்திற்கு செட் எ ல்லாம் போட்டு அசத்தி வருகின்றனர்.
மறுபுறம் தனுசையும் சமாதானப் படுத்தி வருகின்றனர். இதற்கிடையில் கேப்டன் மில்லர் படப்பிடிப்பை நிறுத்திவிட்டு சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ் கமிட்டான புதிய படத்தின் பூஜையும் தொடங்கியது. ஒருவேளை அந்த படத்தின் படப்பிடிப்பிற்கு தனுஷ் கிளம்பி விடுவாரோ என்றும் கேப்டன் மில்லர் பட குழு பதறுகிறது.