கடந்த வாரம் இயக்குனர் கோகுல் இயக்கத்தில் ஆர்.ஜே பாலாஜி நடிப்பில் வெளியான திரைப்படம் தான் சிங்கப்பூர் சலூன் . இந்த படத்தில் ஆர் ஜே பாலாஜி உடன் இணைந்து மீனாட்சி சௌத்ரி ,சத்யராஜ் ,லால் ,கிஷன் தாஸ் ,தலைவாசல் விஜய் ,ஜான்விஜய் ,சின்னி ஜெயந்த், ரோபோ சங்கர் போன்ற பல பிரபலங்கள் நடித்திருந்தனர் . இந்தப் படத்தை ஐசரி கணேஷ் தயாரித்திருந்தார்.
மேலும் இந்த திரைப்படம் தொடங்கி இரண்டு வருடங்கள் கழித்து தான் வெளியானது . அப்படி தாமதமாக வெளியானாலும் இந்த திரைப்படம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது என்று தான் சொல்ல வேண்டும். குறிப்பாக இந்த படத்தில் நடித்திருந்த எல்லா கதாபாத்திரமும்,
பெரியளவில் பேசப்பட்டது . இப்படி வெளியான திரைப்படம் ஒரே வாரத்தில் எட்டு கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்துள்ளது. இப்படி இருக்கும் நிலையில் சிங்கப்பூர் சலூன் படத்தில் வெற்றி விழாவை கோலாகலமாக கொண்டாடியுள்ளனர் . அப்போது சிங்கப்பூர் சலூன் படத்தின்,
இயக்குனருக்கு தங்கச்செயின் பரிசாக கொடுத்தது மட்டுமல்லாமல் உங்களுடைய அடுத்த படத்தையும் தயாரிக்கிறேன் என்று வாக்கு கொடுத்து இருக்கிறார் தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் தற்போது புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது …