காட்டில் அந்த காட்சி நடந்தால்..?? வீட்டிலும் அந்தமாதிரியான காட்சிகளும் நடக்கும்..?? நடிகை ரியா விலகுவதற்கு இதன் காரணமா..??
பிரபல தொலைக்காட்சி சேனலில் ஒளிப்பரப்பாகி வரும் சீரியல் ராஜா ராணி 2 . ஆரம்பத்தில் ஆலியா மானசா நடித்து அதன்பின் கர்ப்பமாகியதால் சீரியலில் இருந்து வெளியேறினார். அவருக்கு பதில் மாடல் நடிகை ரியா விஸ்வநாதன் காவியா ரோலில் கமிட்டாகி நடித்து வந்தார். சீரியல் ஆரம்பித்து ஒரு வருடமாகப்போகும் நிலையில், ரியா காவியா ரோலில் இருந்து விலகிவிட்டதாக வீடியோ ஒன்றினை பகிர்ந்து ஷாக் கொடுத்தார்.
அவருக்கு பதில் நடிகை ஆஷா கெளடா காவியாவாக நடித்து வருகிறார். இந்நிலையில் நடிகை ரியா, ராஜா ராணி 2வில் இருந்து விலகியதற்கான காரணத்தை சமீபத்திய பேட்டியொன்றில் கூறியிருக்கிறார். அதில், ராஜா ராணி அரம்பித்து ஒரு வருடமாகப்போகும் நிலையில், முதலில் டேட் கிளாஷ் ஆகியது.
ஆரம்பத்தில் 2 மாதம் சஜமானது என்பதால் நைட் ஷூட்டிற்கும் செல்வேன். பகல் இரவு ஷூட்டிங் இருந்தால் என்னால் தூங்க முடியாமல் என் குடும்பத்துடன் நேரத்தை செலவிடாமல் போகும் சூழல் ஏற்பட்டது. கட்டில் காட்சி எடுக்கும் சமயத்தில் வீட்டில் ரொமான்ஸ் காட்சிகளும் நடக்கும்.
அப்படியே நாட்கள் ஷூட்டிங்கிற்கே சென்றதால் என்னால் ஹாண்ட்டில் செய்ய முடியவில்லை. மேலும், ஒரு மாதத்தில் லீவ் கிடையாது. 6 நாட்கள் லீவ், 22 நாட்கள் வேலை இருக்கும். ஆனால் அந்த 6 நாட்கள் இடையில் எப்போவாவது வருவதால் அந்த லீவ் போவது தெரியாது
என்று இருந்ததால் தயாரிப்பு நிறுவனத்திடம் சென்று நான் விலகுகிறேன் என்று கூறிவிட்டேன். ஆனால், அவர்கள் உடனே அதை ஏற்றுக்கொண்டார்கள் என்று விலகியதற்கான காரணத்தை கூறியிருக்கிறார் ரியா விஸ்வநாதன்.