வெறிபிடித்த காட்டு நாய்களை நண்பர்களுடன் வேட்டையாடும் ஆண்ட்ரியா..!! ரசிகர்களை மிரள வைத்த வைரலாகும் வீடியோ உள்ளே..!! ஆண்ட்ரியாவின் வெறியால் கதிகலங்கிய..??
எப்போதுமே கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதைகளை மட்டும் தேர்வு செய்து நடிப்பவர் நடிகை ஆண்ட்ரியா. இவர் நடிப்பில் உருவாகியிருக்கும் அதிரடி திரில்லர் திரைப்படம் நோ என்ட்ரி. இந்த படத்தின் மிரட்டும் ட்ரெய்லர் தற்போது ரிலீசாகி சோசியல் மீடியாவில் ட்ரெண்ட் ஆகிக்கொண்டிருக்கிறது. அழகு கார்த்திக் என்பவர் இயக்கும் இந்தப் படத்தை ஜம்போ சினிமாஸ் சார்பாக A. ஸ்ரீதர் தயாரித்துள்ளார்.
முழுக்க முழுக்க திரில்லர் படமாக உருவாகி இருக்கும் இந்த படம் சிரபுஞ்சி பகுதிகளில் படமாக்கப்பட்டுள்ளது. இதில் பிரதாப் போத்தன் ஆண்ட்ரியாவின் அப்பாவாக நடித்திருக்கிறார். படத்தில் சயின்டிஸ்ட் ஆக நடித்திருக்கும் பிரதாப் போத்தன், நான்கு காட்டு நாய்கள் சேர்ந்தால் ஒரு யானையை தாக்கி கொன்றுவிடும் என்பதை புத்தகத்தில்
படித்திருக்கிறார். அந்தக் காட்டு நாய்களை இன்னும் கொஞ்சம் வெறியேற்ற வேண்டும் என இரண்டு வருடங்களாக ஆய்வு நடத்தி S40 என்ற மருந்தை தயார் செய்து அதை நாய்களிடம் செலுத்தி பார்த்திருக்கிறார்.நாய்கள் உடம்பில் S40 பு திதாக ஒரு வைரஸை உருவாக்க துவங்கியது. இதனால் வெறியேறிய அந்த காட்டு நாய்கள் புலிக்கு
இணையான பலத்தை பெறுகிறது. இதற்கிடையில் பிரதாப் போத்தன் இறந்து போக அவருடைய மகள் ஆண்ட்ரியா இந்த ரிசர்ச்சில் என்ன நடந்தது என்பதை தெரிந்து கொள்ள நண்பர்களுடன் இணைந்து காட்டிற்குள் செல்கிறார்.அப்போது அந்த காட்டு நாய்கள் ஆண்ட்ரியாவின் நண்பர்களை தாக்க, உடனே அவர்களும் வெறி பிடித்தவர்கள்
போல் உடன் இருப்பவர்களை கடித்துக் கொதறுகின்றனர். எனவே அந்த நாய்களை அழிக்க வேண்டும் என்பதற்காக காட்டிற்குள் இருக்கும் வீட்டில் தங்குகின்றனர்.பின் அந்த காட்டு நாய்கள் அவர்கள் தங்கி இருந்த வீட்டை சுற்றி வளைத்தது. அந்த நாய்களிடமிருந்து எப்படி தப்பிக்கிறது என உடன் இருப்பவர்கள் குழம்பினாலும்
ஆண்ட்ரியா துணிச்சலுடன் நாய்களை தும்சம் செய்து வேட்டையாடும் ட்ரைலர் வீடியோ தற்போது வெளியாகி, பதைபதைக்க வைத்துள்ளது. ட்ரைலரே இப்படி மிரட்டி இருக்கும் போது, படம் எப்படி இருக்கும் என நோ என்ட்ரி படத்தின் ரிலீஸுக்காக ரசிகர்கள் ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர்.