விஜய் அஜித்திற்கு இணையாக 50 கோடி சம்பளம் கேட்கும் பிரபல வில்லன் ஹீரோ..?? தயாரிப்பாளர் தலையில் இடியை போட்ட நடிகர்..?? இந்த நடிகரா இத்தனகோடி கேக்கறாரு..!!

0

கோலிவுடில்   படத்தின்   பட்ஜெட்டை   விடவும்   ஹீரோக்களின்   சம்பளம்   தான்   அதிகம்.   அந்த வகையில்   டாப்   ஹீரோக்களாக   இருக்கக்கூடிய   விஜய்   மற்றும்   அஜித்   ஒரு   படத்திற்காக   100 கோடி   வரை   சம்பளமாக   பெறுகின்றனர் .   ஆனால்   அவர்கள்   நடிக்கும்    படத்திற்கு   கூட அந்த   அளவிற்கு   வசூல்   வருகிறதா   என்பதே   ச ந்தேகம்   தான்.   அந்த   வரிசையில் தற்பொழுது  வில்லன்   ஹீரோ   ஒருவர்   களமிறங்கியுள்ளார்.   ஜூனியர்   ஆர்டிஸ்ட்   ஆக   தனது திரைபயணத்தை   தொடங்கி   பல   வருடங்களுக்குப்   பிறகு

ஹீரோவாக   அடையாளம்    காணப்பட்டவர்   தான்   விஜய்   சேதுபதி.   இவரது    நடிப்பில் வெளிவந்த   பீட்சா,   சூது   கவ்வும்   என அடுத்தடுத்து   சூப்பர்   ஹிட்   படங்களை    கொடுத்ததன் மூலம்   தனக்கான   ஒரு தனி   இடத்தை   பிடித்தார்.   ஹீரோ,   வில்லன்,    குணச்சித்திர கதாபாத்திரம்,    காமெடி    என   தனது   நடிப்பின்   மூலம்   பி ஸியான   நடிகராக   வலம்    வந்து கொண்டிருக்கிறார்.

தற்பொழுது   பாலிவுட்டில்    அறிமுகமாகி   இருக்கும்   இவர்   ஷாருக்கான்    உடன்   ஜவான், கத்ரீனா    கைஃப்   உடன்   மெர்ரி   கிறிஸ்மஸ்   போன்ற   படங்களிலும்   விஜய்   சேதுபதி பிஸியாக   நடித்து    வருகிறார் .   இந்நிலையில்    தனது   சம்பளத்தினை   இரு     மடங்காக உயர்த்தி    உள்ளார்.    இதனைத்    தொடர்ந்து   கன்னடத்திலும்    நடிக்க   உள்ளதாக    தகவல் வெளியாகியுள்ளது.

சமீபத்தில்   இவரது    வில்லத்தனமான     நடிப்பின்    மூலம்    வெளிவந்த    விக்ரம்    திரைப்படம் மாபெரும்   வெற்றி   பெற்று    வசூல்   சாதனை   படைத்தது .  இதில்    கமல்ஹாசனுக்கே    டப் கொடுக்கும்    விதத்தில்   தனது   நடிப்புத்   திறமையை    வெளிப்படுத்தி   இருப்பார்.    இதனைத் தொடர்ந்து   இவரது   நடிப்பில்   வெளிவந்த   மாமனிதன்   திரைப்படமும்   மக்கள்    மத்தியில் பாராட்டுகளை   பெற்று    வருகிறது.

மேலும்   இயக்குனர்   வெற்றிமாறன்    இயக்கத்தில்    விஜய்   சேதுபதி    நடித்துள்ள    விடுதலை திரைப்படமும்    வெளிவர    இருக்கிறது.    வருடத்திற்கு 12    படங்கள்   வரை   கொடுத்து   வந்த இவர்   இப்பொழுது   வ  ருடத்திற்கு    நான்கு   ஐந்து   படங்களை   மட்டுமே    கொடுத்து    வருகிறார்.   இந்நிலையில்    ஹீரோக்களை   விட   வில்லன்   கதாபாத்திரம்   மக்கள்   மத்தியில்   நல்ல வரவேற்பு   பெற்று   வருகிறது.

இதற்கெல்லாம்   காரணம்   சினிமாவில்   டாப்   ஹீரோக்களாக   இருக்கக்கூடிய    நடிகர்கள்   சமீப     காலமாகவே   வில்லன்   கதாபாத்திரத்திற்கு   அதிக   முக்கியத்துவம்     கொடுத்து வருகின்றனர்.   அதனால்   தான்   கிடைக்கின்ற    வாய்ப்பை    தக்கவைத்து   ஒரு    பெத்த லாபத்தை  பார்த்து   வருகிறார்   விஜய்    சேதுபதி.   அதுவும்   விஜய்   அஜித்திற்கு   இணையாக   50 கோடி   வரை சம்பளமாக   கேட்டுள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.