எம் ஜி ஆர் க்கு ஈடு கொடுக்க முடியாமல் தோல்வியை சந்தித்த நடிகர் திலகம் சிவாஜி..?? 18 லட்சத்தில் உருவான இந்த திரைப்படம் ..!! இத்தனை கோடி வசூல் சாதனை..!!
மக்கள் திலகம் எம்ஜி ஆர் அ வர்கள் தமிழ் சினிமாவையே வேறொரு பரிமாணத்திற்கு கொண்டு சென்றார் என்றே சொல்லலாம். சினிமாவில் ஒரு நடிகனாக நடித்தது மட்டு மில்லாமல் சினிமாவை சேர்ந்த பல பேரையும் வாழ வைத்திருக்கிறார். அவர் செய்த இந்த உதவிகள் தான் அவர் மறைந்தாலும் இன்றுவரை அவர் பேர் சொல்கின்றன. அந்த காலத்தில் நடிகர், நடிகைகள் பலர் இயக்குனராக முயற்சி செய்திருக்கின்றனர். ஆனால் அவர்கள் எல்லோரும் வெற்றி பெறவில்லை.
மக்கள் திலகம் எம்ஜி ஆர் ஒரு இ யக்குனராகவும் வெற்றி கண்டார். எம்ஜிஆர் முதன் முதலில் இயக்கி தயாரித்து நடித்த திரைப்படம் நாடோடி மன்னன். இந்த படத்தில் சக்கரபாணி, நம்பியார், பானுமதி ஆகியோர் நடித்திருந்தனர். பதினெட்டு லட்சத்தில் உருவான இந்த திரைப்படம் அந்த காலத்திலேயே ஒரு கோடி வசூல் செய்தது.
எம்ஜிஆர் அவர்கள் இரண்டாவதாக இயக்கி, தயாரித்து, நடித்த திரைப்படம் உலகம் சுற்றும் வாலிபன். அதிக பொருட்செலவில் முழுக்க வெளிநாடுகளிலேயே எடுக்கப்பட்ட படம் இதில் எம்ஜிஆர் இரட்டை வேடங்களில் நடித்த இந்த படம் அந்த காலத்திலேயே நான்கு கோடியை தாண்டி வசூல் சாதனை படைத்தது.
‘கயல்விழி’ என்னும் புதினத்தை தழுவி எடுக்கப்பட்ட திரைப்படம் மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன். இந்த ப டத்தை எம்ஜிஆர் அவர்கள் இயக்கி , நடித்திருந்தார். இந்த படம் தான் எம்ஜி ஆர் கடைசியாக நடித்த திரைப்படம் கூட . எம்ஜிஆர் முதலமைச்சராக பொறுப்பேற்ற பின் வெளியான இந்த படம் நூறு நாட்களுக்கு மேல் ஓடியது.
சக போட்டியாளரான நடிகர் திலகம் சிவாஜி கூட ஒ ரு தயாரிப்பாளராக ஜெயிக்கவில்லை தோல்வியை சந்தித்து இருக்கின்றனர். எம்ஜிஆர் அவர்களின். ஆனால் எம்ஜிஆர் அவர்கள் தொட்டதெல்லாம் துலங்கும் என்பது போல் அவர் கால் எடுத்து வைத்த எல்லா இடத்திலும் வெற்றியை மட்டுமே சந்தித்து இருக்கிறார்.