மொத்த நெட்வொர்க்கையும் வளைக்க போகும் மன்மதன்..!! விஜய் போல் லிட்டில் நடிகருக்கும் கொடுக்கும் முக்கியத்துவம் ..!! லாஸ்ட்ல ப்ர்ஸ்ட் இந்த நடிகர் தான் ..!!

0

தமிழ்   சினிமாவை   பொறுத்தவரையில்   டாப்   நடிகர்களில்   அதிக   ரசிகர்    கூட்டத்தை பெற்றுள்ளவர்   தளபதி   விஜய்.   இன்றளவும்   அவரது   படம்   வெளியானால்   திருவிழா   கோலம் போல்   திரையரங்குகள்   காட்சி   அளிக்கிறது.   இதற்கெல்லாம்   அவரது   ரசிகர்கள்   தான் காரணம்.  இப்படி   விஜய்க்கு   அவரது   ரசிகர்கள்   எவ்வளவு   முக்கியத்துவம் கொடுக்கிறார்களோ   அது   போல்   இப்போது   சிம்புக்கும்   ஆதரவு   பெருகி   வருகிறது.

அதாவது   ஒரு   ஹீரோ   ஐந்து   வருடங்களாக   தொடர்   தோல்வியை   கொடுத்தால்   மீண்டு வருவது   மிகவும்   கடினம்.   ஆனால்   சிம்பு   ரசிகர்கள் அவரின்   மாஸ்    வெற்றிகாக    பல வருடங்களாக   காத்திருந்தனர்.  அவர்களின்   நம்பிக்கையை   மாநாடு   படத்தின்   மூலம்   சிம்பு நிறைவேற்றி   இருந்தார்.   அது  மட்டுமின்றி   இந்த   படத்தின்   வெற்றியால்   தொடர்ந்து

சிம்பு   தமிழ்   சினிமாவில்   மாஸ்   காட்டி   வருகிறார்.   இப்போது   பத்து   தல   படத்தில் நடித்துள்ளார்.   இப்படம்   மார்ச்   30  ஆம்   தேதி   திரையரங்குகளில்   வெளியாக   உள்ளது.  மேலும்   இன்று    பத்து   தல   படத்தின்   டீசர்   வெளியாகிறது.   இந்நிலையில்   நேரு   உள் விளையாட்டு   அரங்கில்   வருகின்ற   மார்ச் 18   ஆம்   தேதி   பிரம்மாண்டமாக   ஆடியோ

லான்ச்   பங்க்ஷன்   நடக்க   இருக்கிறது.   இதில்   சிறப்பு   விருந்தினராக   சூர்யா   மற்றும் இசையமைப்பாளர்   ஏ ஆர் ரகுமான்   கலந்து   கொள்ள   இருக்கின்றனர்.  வாரிசு    படத்தின் ஆடியோ    லான்ச்சில்    விஜய்   ரசிகர்களை   எப்படி   தூக்கி    வைத்து    கொண்டாடினாரோ அதேபோல்   சிம்புவும்

மொத்த   நெட்வொர்க்கையும்   அழைத்து    இருக்கிறாராம்.   ஏற்கனவே    மாநாடு    ஆடியோ லாஞ்சில்    ரசிகர்கள்   முன்பு   சிம்பு    கண்கலங்கி   பேசி   இருந்தார்.  அதேபோல்   தான்   இப்போது   வரும்   தொடர்   வெற்றிக்கு   ரசிகர்கள்   தான்   காரணம்   என்று   நன்றி    சொல்ல உள்ளாராம்.

அது  மட்டுமின்றி   குறிப்பாக    அரசியல்   பற்றி   சிம்பு   பேச   உள்ளதாக   அவரது    நெருங்கிய வட்டாரத்திலிருந்து   தகவல்    வெளியாகி    உள்ளது.    மேலும்   இந்த   ஃபங்ஷனை    எதிர்நோக்கி சிம்பு  ரசிகர்கள்    ஆர்வமாக    காத்திருக்கிறார்கள்.

Leave A Reply

Your email address will not be published.