April 28, 2024

அரசியல் ஒண்ணும் விளையாட்டில்ல தம்பி ..!! விஜய்க்கு கமல் கொடுத்த அறிவுரை ..!! பட்டவன் சொல்றேன் புரிஞ்சு நடந்துக்கோ ..!!

தற்போது தமிழ் சினிமாவை கலக்கி வரும் டாப் நடிகர்களில் ஒருவர் தான் நடிகர் விஜய் . சமீபத்தில் இவருடைய நடிப்பில் வெளியான லியோ திரைப்படம் பிரம்மாண்ட வெற்றி படமாக அமைந்தது . அது மட்டுமல்லாமல் இந்த திரைப்படம் 500 கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்தது . இதையடுத்து அடுத்ததாக இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கி வரும் தளபதி 68 என்ற படத்தில் நடித்துக் கொண்டு வருகிறார்  விஜய்.

இப்படி இருக்கும்  நிலையில் அண்மைக்காலமாக நடிகர் விஜய் அரசியலுக்கு வருவதற்காக பல்வேறு வேலைகளை செய்யுது வருவது அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான்.  இதனால் கண்டிப்பாக வருகின்ற 2026 ஆம் ஆண்டு தேர்தலில் விஜய் போட்டியிடுவார் என்று கூறப்படுகிறது.

இந்நிலையில் நடிகரும் , மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் விஜய்க்கு அறிவுரை கூறியுள்ளாராம் . அந்த வகையில் லியோ வெற்றியை முன்னிட்டு பட குழுவினர்களுடன் கமல்ஹாசனை சந்தித்திருக்கிறார் விஜய்.  அப்போது விஜய்யிடம் கமல்ஹாசன் அரசியலை,

விளையாட்டாக எடுத்துக் கொள்ள வேண்டாம் என்று கூறினாராம் . மேலும் ஏற்கனவே நடந்து முடிந்த தேர்தலில் போட்டியிட்டு படு தோல்வி அடைந்தார் கமல்ஹாசன் . இதனால் விஜய்க்கு இப்படி ஒரு அறிவுரை கமல் கொடுத்திருக்கிறார் என்று தகவல் வெளியாகியுள்ளது .

அது மட்டுமல்லாமல்  அரசியலில் விஜய்யுடன் ஒத்துப்போனால் வருங்காலத்தில் அவருடனும் கூட்டணி வைத்துக் கொள்வேன் என்றும் கூறியிருக்கிறார் நடிகர் கமல்ஹாசன்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *