May 6, 2024

மீசை ராஜேந்திரன் மீசையை எடுத்துவிட்டாரா ..?? கொடுத்த வாக்கை நான் காப்பாற்றிவிட்டேன் ..!! தீயாய் பரவும் புகைப்படம் ..!!

மீசை ராஜேந்திரன் ஓர் பிரபலமான தமிழ் திரைப்பட துணை நடிகர் ஆவார்.  பல தமிழ் படங்களில் காமெடி வேடங்களிலும்,  துணை வேடங்களிலும் நடித்திருக்கிறார் நடிகர் மீசை ராஜேந்திரன்.  இப்படி இருக்கும் நிலையில் லியோ திரைப்படம் வெளிவருவதற்கு முன்பு பேட்டி ஒன்றை கொடுத்த நடிகர் மீசை ராஜேந்திரன் லியோ திரைப்படம் கண்டிப்பாக ஜெயிலர் படத்தின் வசூலை முறியடிக்காது .

ஒரு லட்சம் பந்தயம் . அப்படி மட்டும் முறியடித்து விட்டால் என்னுடைய மீசையை எடுத்துக் கொள்கிறேன் என்று சவால் விட்டிருந்தார் நடிகர் மீசை ராஜேந்திரன் . இவர் பேட்டி கொடுத்த பிறகு வெளியான லியோ திரைப்படம் மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்துள்ளது . அதுமட்டுமில்லாமல்,

பன்னிரண்டு நாட்களில் 540 கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்துள்ளது  லியோ திரைப்படம் . அதோடு  நாளுக்கு நாள் ஜெயிலர் படத்தின் வசூலை நெருங்கிக் கொண்டிருக்கிறது லியோ திரைப்படம்.  இந்நிலையில் கொடுத்த வாக்கை நான் காப்பாற்றி விட்டேன் என்று,

மீசை இல்லாத முகத்துடன் ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் நடிகர்  மீசை ராஜேந்திரன் . ஆனால் இது அவருடைய புகைப்படம் இல்லை என்றும் , ரசிகர்கள் எடிட் செய்து அவருடைய பெயரில் தொடங்கப்பட்ட பக்கத்தில் இதுபோன்று வெளியிட்டுள்ளனர் என்று தகவல்,

வெளியாகியுள்ளது .  மேலும் இதை நடிகர் விஜய் ரசிகர்கள் தான் செய்திருப்பார்கள் என்று கூறப்படுகிறது .  அந்தப் புகைப்படம் தற்போது இணையத்தில் தீயாய் பரவி வருகிறது. இதோ நீங்களும் பாருங்க …

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *